இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மீனவர்கள் ஸ்டிரைக்

9/10/2025 4:54:45 PM
பள்ளிகளில் நடைபெறும் காலை வணக்க கூட்டத்தில் டெங்கு தடுப்பு குறித்து மாணவர்களுக்கு அறிவுரை: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு வேலூர் மக்களவை தொகுதியில் நாளை வாக்குப்பதிவு: 3,957 போலீசார், 1,600 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு

மணமேல்குடி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தில் பந்த்துக்கு ஆதரவாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசைப்படகு ஒன்றுக்கு மாதந்தோறும் 2500 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. அரசால் வழங்கப்படும் மானிய டீசல் 1800 லிட்டர் போக மீதியை தனியார் டீசல் மையங்களில் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. அரசால் தற்போது லிட்டருக்கு ரூ.14 மானியம் வழங்கப்படுகிறது.
தற்போது டீசல் விலை லிட்டர் ரூ.80ஐ நெருங்கியுள்ளது. இந்த கிடுகிடு விலை ஏற்றத்தால் மீனவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் இன்று திமுக மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் பந்த் நடைபெறுகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம் மற்றும் மீனவ கிராமங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. 500க்கும் மேற்பட்ட விசைபடகுகள் மீன் இறங்குதளங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 301 விசைபடகுகள், 4 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. நாகை அக்கரைப்பேட்டையில் திருவிழா நடப்பதால் அந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வேதாரண்யம், பூம்புகார், தரங்கம்பாடி மீனவர்கள் வழக்கம்போல் இன்று கடலுக்கு சென்றனர்.

ராமேஸ்வரம்: பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற நேற்றே வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கினர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தங்கச்சிமடம் உள்பட ராமேஸ்வரம் மாவட்ட மீனவரகள் இன்று கடலுக்கு செல்லவில்லை. கன்னியாகுமரி உள்பட தமிழகம் முழுவதும் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. விசைப்படகு மீனவர்களின் வேலைநிறுத்தத்தால், படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. புதுகை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

மேலும் சில
  • பள்ளிகளில் நடைபெறும் காலை வணக்க கூட்டத்தில் டெங்கு தடுப்பு குறித்து மாணவர்களுக்கு அறிவுரை: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு



  • தமிழகம் முழுவதும் வருகிற 15ம் தேதி பள்ளி, அலுவலகங்களில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாட தமிழக அரசு உத்தரவு



  • வேலூர் மக்களவை தொகுதியில் நாளை வாக்குப்பதிவு: 3,957 போலீசார், 1,600 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு



  • தூத்துக்குடி அருகே கடலில் சிக்கிய மாலத்தீவு மாஜி துணை அதிபர் கடற்படையிடம் ஒப்படைப்பு



  • வேலூர் மக்களவை தொகுதியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது: நாளை மறுதினம் வாக்குப்பதிவு



  • தங்கம் விலை தொடர்ந்து உயர்கிறது: சவரன் ரூ27,328க்கு எகிறியது... இன்று 264 ரூபாய் அதிகரிப்பு



  • தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் ரூ.146 கோடியில் 1050 பாலங்கள்



  • போக்சோ சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்... விஜயகாந்த் வரவேற்பு



  • தமிழகம் முழுவதும் 105 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்



  • மு.க.ஸ்டாலின் மீது போலீசார் திடீர் வழக்குப்பதிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]