காமெடி நடிகர் ‘ராக்கெட்’ ராமநாதன் காலமானார்
9/5/2025 3:51:49 PM
சென்னை: நகைச்சுவை நடிகர் ‘ராக்கெட்’ ராமநாதன் காலமானார். ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஸ்பரிசம், மணக்கணக்கு, வளர்த்தகடா, மண்சோறு, கோயில் யானை, நாம், வரம் உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ராக்கெட் ராமநாதன் (74). சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வந்தார். நேற்று மாலை அவர் காலமானார். ராக்கெட் ராமநாதன் இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது. அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தொலைக்காட்சியிலும், பொது நிகழ்ச்சிகளிலும் மிமிக்ரி செய்து பிரபலமானவர் ராமநாதன், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றவர்.
இவர் பிஸ்கெட் டின் ஒன்றை வைத்துக்கொண்டு ஷோக்கள் நடத்துவதில் பிரபலமானவர். பானுமதி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.
1970களில் அமெரிக்கா ராக்கெட் விட்ட சமயத்தில் கவிஞர் வில்லிப்புத்தன், ‘ராக்கெட்’ என்று அடைமொழி வைத்துக்கொள். கொஞ்சம் வேகமாக இருக்கும்’ என்று அவரிடம் சொல்ல, அன்றிலிருந்து தனது பெயருக்கு முன் ‘ராக்கெட்’ என்று அடைமொழி சேர்த்துக்கொண்டார் ராமநாதன்.