இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கருணாநிதி மறைவு: 43 திமுகவினர் அதிர்ச்சியில் மரணம்

8/9/2025 3:23:07 PM
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு 15ம் தேதி வரை விமான சேவை ரத்து: ராணுவம் குவிப்பால் திடீர் அறிவிப்பு பயன்பாட்டில் இல்லாத 58 சட்டங்கள் நீக்கம்: ஆந்திர சட்டமேலவை சட்டத்தில் திருத்தம்... சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மறைந்த செய்தியை டிவியில் பார்த்த 43 பேர் அதிர்ச்சியில் இறந்தனர். நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்த புறாகிராமத்தை சேரந்தவர் உலகநாதன்(47). இவர் கருணாநிதி இறந்த அதிர்ச்சியில் நேற்று முன்தினம் இறந்தார். கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த கலையரசன்(26) என்பவர் கருணாநிதி இறந்த செய்தியை நேற்று முன்தினம் டிவியில் அறிவித்ததை கேட்டபோது, அய்யோ என்று அலறி வீட்டிலேயே மயங்கி கீழே விழுந்து இறந்தார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ரெகுநாதபுரம் ஊராட்சி இருகரை மெயின்ரோடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன்(42) என்பவர் நேற்று முன் தினம் தனது வீட்டில் திமுக தலைவர் கருணாநிதி மரண செய்தி அறிந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அதேபோல், வலங்கைமான் அடுத்த மேலவிடையல் ஊராட்சி நல்லம்பூர் தெற்குத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி பிரேமா(50) என்பவர் நேற்று முன் தினம் வீட்டில் தொலைக்காட்சியில் கருணாநிதி மரணமடைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியில் இறந்தார்.மன்னார்குடி அருகே வடுவூர் தென்பாதி கிராமம் தேவன் தெருவை சேர்ந்தவர் செய்யது இப்ராகிம்(75).  திமுக தொண்டர். உணவு சாப்பிட மறுத்து கடந்த 3 நாட்களாக டிவி பார்த்துக்கொண்டே இருந்தார். நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார். சீர்காழி தாடளான் தெற்கு வீதியில் வசித்தவர் சுந்தரம் (85). திமுக மூத்த முன்னோடி. இவர் நேற்று காலை தொலைகாட்சியில் கருணாநிதி இறந்த செய்தியை பாத்தபோது திடீர் என்று நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா மருதூரை சேர்ந்தவர் கணேசன்(45). திமுக கிளை முன்னாள் அவைத்தலைவர். இவர் நேற்று காலை வீட்டில் டிவி பார்த்து கொண்டு இருந்தார். அப்போது, கருணாநிதியின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்து வீட்டிலேயே மயங்கி விழுந்து இறந்தார்.
வேதாரண்யம் அடுத்த வாய்மேடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (40). இவர் டிவி பார்த்து கொண்டு இருந்த போது அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளூரை சேர்ந்தவர் ஜெயராமன் (55). திமுக தலைவர் மறைந்த செய்தி அறிந்தது முதல் வேதனையில் உணவருந்த மறுத்த அவர், நேற்று வீட்டில் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்துள்ள பெரம்பூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (68). இவர் திமுக ேமடை பாடகர். இவர் நேற்று முன்தினம் வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது திமுக தலைவர் கருணாநிதி இறந்த செய்தி அறிவிக்கப்பட்டது. இதில் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிலேயே மாரடைப்பால் மரணம் அடைந்தார். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நெய்தலூர் மேலத்தெருவை சேர்ந்த தமிழ்செல்வத்தின் மனைவி ராணி(40). திமுக தொண்டர். கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை வீட்டில் டிவியில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு ராணி இறந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பொன்னன்விடுதியை சேர்ந்தவர் சின்னையா(60). திமுக தொண்டர். இவர் கருணாநிதி மரணமடைந்ததில் இருந்து சோகத்தில் இருந்தார். நேற்று காலை தொலைக்காட்சியில் துக்க நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த போது திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார். கரூர் மாவட்டம் புலியூர் காளிபாளையத்தை சேர்ந்த முருகேசன் (70). திமுக தொண்டர். மனவேதனையில் இருந்தார். நேற்று மாலை கருணாநிதி இறுதிசடங்கு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தார்.

 அப்போது திடீர் என அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார். குளித்தலை அருகே உள்ள மருதூரை சேர்ந்தவர் துரைசாமி(80), மொழிப்போர் வீரர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று 36 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்தவர். கருணாநிதி மீது தீவிர பற்று கொண்டவர். நேற்று இரவு கருணாநிதியின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை டிவியில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு துரைசாமி இறந்தார்.
புதுகை மாவட்டம் கறம்பக்குடி தென்னகர் கீழத்தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலு(45). திமுக தொண்டர். இவர் நேற்று சீனிகடை முக்கத்தில் திரையில் ஒளிபரப்பப்பட்ட கருணாநிதியின் இறுதி சடங்கை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பாலேகுளிதோப்பு பகுதியை சேர்ந்த விவசாயி மாரி (82). திமுக உறுப்பினரான இவர், கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் கூலமேடு கிராமம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளர் செல்லமுத்து (57). கருணாநிதி உயிரிழந்த செய்தியை அறிந்த செல்லமுத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இடைப்பாடி தாவாந்தெரு பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் (60), திமுக தொண்டரான இவர், நேற்று கருணாநிதியின் இறுதி ஊர்வலம் செய்தியை, டிவியில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கொங்கணாபுரம் கச்சுபள்ளி இளவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா(எ) வெள்ளக்குட்டி (45).  திமுக உறுப்பினர்.  கருணாநிதி உயிரிழந்த செய்தியை கேட்டு, சோகத்துடன் இருந்து வந்தார். இந்நிலையில் சோகம் தாங்க முடியாமல் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கச்சுபள்ளி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன்(85). திமுக உறுப்பினர். இவர் கருணாநிதியின் இறுதி ஊர்வல நிகழ்ச்சியை டிவியில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே ெகடகரஅள்ளியை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜன் (50). திமுக உறுப்பினர். கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட காட்சியை பார்த்து கொண்டிருந்த கோவிந்தராஜன் திடீரென நெஞ்சை பிடித்தபடி மயங்கி விழுந்து உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் கீரம்பூரை அடுத்த ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (75). திமுக தொண்டரான இவர், நேற்று டிவியில் கருணாநிதி இறுதி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து இறந்தார்.  கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த கொள்ளிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜன் (70), திமுக நிர்வாகி. நேற்று இவர் தனது வீட்டில் திமுக தலைவர் கலைஞரின் மறைவு செய்தியை டி.வியில் பார்த்துக் கொண்டிருந்தபோது அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

குறிஞ்சிப்பாடி வட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள வழுதலம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட, சின்னதானம்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன் (32), திமுக பிரமுகர். கருணாநிதியின் இறுதி நிகழ்ச்சியை டிவியில் பார்த்துக் கொண்்டிருந்தபோது அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.  கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள டி.புடையூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் பாலையா (39, திமுக பிரமுகர்) என்பவரும் திமுக தலைவர் மறைவால் அதிர்ச்சியடைந்து நேற்றிரவு திடீரென இறந்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் வள்ளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மோகன் (56). கருணாநிதி இறந்த அதிர்ச்சியில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். உளுந்தூர்பேட்டை அருகே கூவாடு கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி பெரிமா (40). நேற்று திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு சம்பவத்தை டிவியில் பார்த்தார். இதனால் இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உன்னியூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் மனோ என்ற கிறிஸ்துதாஸ் (52). மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளர். நேற்று டிவியில் கருணாநிதியின் இறுதி ஊர்வல நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த இவர் மயங்கி விழுந்து இறந்தார்.
தேனி மாவட்டம் போடி அண்ணாநகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(54). திமுக தொண்டர். நேற்று மதியம் 1 மணியளவில் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நேரலை நிகழ்ச்சியை டிவியில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது துக்கம் தாங்காமல் அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்(50), திமுக தொண்டரான இவர், மொழிபோர் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்றுள்ளார்.  கருணாநிதியின் இறுதி ஊர்வல நிகழ்ச்சியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த இவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

நெல்லை மாவட்டம், புளியங்குடி அடுத்த முள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (68). திமுக பிரமுகர்.  திமுக தலைவர் கருணாநிதி இறந்தார் என்ற செய்தியை டிவியில் பார்த்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். புளியங்குடி அடுத்த வெள்ளகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவரும், மூத்த திமுக உறுப்பினருமான டேவிட் (70) என்பவரும் கருணாநிதி மரண செய்தி கேட்டு ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். சங்கரன்கோவில் அடுத்த பனவடலிசத்திரம் அருகேயுள்ள மறுக்காலங்குளத்தை சேர்ந்தவர் சண்முகையா (68). திமுக தொண்டர். கருணாநிதி மறைந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அதே பகுதியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் வேலுச்சாமி (68) என்பவரும், மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். தென்காசி மங்கம்மா சாலையைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (42). திமுக உறுப்பினரான இவர் டிவியில் ஒளிபரப்பான கருணாநிதியின் இறுதி நிகழ்ச்சியை பார்த்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

நெல்லை டவுன் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோயிலை சேர்ந்தவர் குருநாதன்(எ) குரு(49). திமுக வட்ட செயற்குழு உறுப்பினரான இவர் கருணாநிதியின் மறைவு செய்தி கேட்டு மாரடைப்பால் இறந்தார். நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகேயுள்ள மேலச்செவலில் ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர்  குணசேகரன் (65) மற்றும் வாணியன்குளம் புதுக்காலனியை  சேர்ந்தவர் தங்கபாண்டி (68). இருவரும் திமுக தொண்டர்கள். கருணாநிதியின் இறுதி நிகழ்ச்சியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த  இருவரும் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஜமீன்தேவர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி மகள் ஈஸ்வரி (63). திமுக தொண்டரான இவர், நேற்று டிவியில் கருணாநிதியின் இறுதி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

குளத்தூரையடுத்த மேல்மாந்தை ஷேக்தாவூத் மனைவி சுவேதாள்பீவி(45). இவர், திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்த தகவல்களை நேற்று முன்தினம் காலையிலிருந்து வீட்டில் டிவியில் பார்த்துக்கொண்டிருந்தார். மாலையில் கருணாநிதி உயிர்பிரிந்தது என டிவியில் செய்திபார்த்ததும் அதிர்ச்சியில் சுவேதாள்பீவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். மதுரை அவனியாபுரம் அருகே பெருங்குடி பர்மா காலனியை சேர்ந்தவர் கணபதி மனைவி இந்திரா (52). தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை நேற்று மாலை டிவியில் பார்த்து கொண்டிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அலங்காநல்லூர் அருகே மாணிக்கம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி (63). திமுக தொண்டர். கருணாநிதி இறந்த தகவலை கேட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அலங்காநல்லூர் அருகே எர்ரம்பட்டியை சேர்ந்தவர் அலங்கார கவுண்டர் (65). தீவிர திமுக தொண்டர். கருணாநிதி இறந்த துக்கத்தில், நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மதுரை கருப்பாயூரணியை சேர்ந்தவர் நாகராஜ் (34). திமுக பிரதிநிதி. கருணாநிதி இறுதிச்சடங்கு காட்சிகளை நேற்று காலை டிவியில் பார்த்து கொண்டு இருந்தார். அப்போது அதிர்ச்சியில் விழுந்து இறந்தார்.

தற்கொலை: வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த விசி மோட்டூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் முருகன்(39). திமுக உறுப்பினரான முருகன், நேற்றுமுன்தினம் திமுக தலைவர் கருணாநிதி காலமானார் என்ற செய்தி கேட்டு மனவேதனை அடைந்தார். நேற்று முருகனின் மனைவி உமாமகேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் சில
  • தூத்துக்குடி அருகே கடலில் சிக்கிய மாலத்தீவு மாஜி துணை அதிபர் கடற்படையிடம் ஒப்படைப்பு



  • வேலூர் மக்களவை தொகுதியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது: நாளை மறுதினம் வாக்குப்பதிவு



  • தங்கம் விலை தொடர்ந்து உயர்கிறது: சவரன் ரூ27,328க்கு எகிறியது... இன்று 264 ரூபாய் அதிகரிப்பு



  • தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் ரூ.146 கோடியில் 1050 பாலங்கள்



  • போக்சோ சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்... விஜயகாந்த் வரவேற்பு



  • தமிழகம் முழுவதும் 105 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்



  • மு.க.ஸ்டாலின் மீது போலீசார் திடீர் வழக்குப்பதிவு



  • நீட் தேர்வின் கொலைப் பசிக்கு மற்றொரு மாணவியும் இரையானாள்: தொடரும் ‘நீட்’ பலிகள்



  • ‘சொமாட்டோ டெலிவரி விவகாரம்’ மதம் பார்ப்பவர்களுக்கு சாப்பாடு இல்லை



  • நாளை ஆடிப்பெருக்கு விழா... திருச்சி காவிரி படித்துறைகளில் முன்னேற்பாடு தீவிரம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]