இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கருணாநிதி பிறந்தநாள் விழா காஞ்சி மாவட்டத்தில் 7 இடத்தில் கொடியேற்றி கொண்டாட்டம்: உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

7/16/2018 5:27:01 PM
33வது நாளான இன்று மிளகாய் நிற பட்டுடுத்தி அத்திவரதர் அருள்பாலிப்பு ஆபரண தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.496 உயர்ந்தது

செங்கல்பட்டு: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் 7 இடங்களில் கொடியேற்று விழா மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். மறைமலைநகர் ஜிஎஸ்டி சாலையில் நடந்த விழாவில், உதயநிதி ஸ்டாலின், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 75 அடி உயர கொடி கம்பத்தில் கொடியேற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘கடந்த 2 நாட்களாக அனைத்து சமூக வளைதளங்களிலும், நாளிதழ்களிலும் திமுகவில் எந்த பொருப்பிலும் இல்லாத உதயநிதி ஸ்டாலின் எப்படி கட்சி கொடி ஏற்றலாம் என்று விமர்சனம் செய்கின்றனர். திமுகவில் கடைகோடி தொண்டனாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன். திமுகவில் கடைசி தொண்டன் கூட கழக கொடியேற்ற தகுதி உடையவன். அந்த உரிமையில் தற்போது கொடியேற்றி உள்ளேன். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கட்சி விழாக்களை நடத்த வேண்டும், தொடர்ந்து கட்சி பணியில் ஈடுபடுவேன்’ என்றார்.

நிகழ்ச்சியில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ, மறைமலைநகர் நகர செயலாளர் சண்முகம், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, நகர இளைஞரணி செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான டி.கே.கமலக்கண்ணன், ஆல்பர்ட், மறைமலைநகர் நகர 4வது வார்டு பிரமுகரும் தொழிலதிபருமான கே.எஸ்.சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர். சிங்கபெருமாள்கோவில் பஜாரில் நடந்த கொடியேற்று விழாவுக்கு, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி தலைமையில் விழா நடந்தது. மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.கே.டி.கார்த்திக், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.ஆர்.சி.ரத்திஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிங்கபெருமாள்கோவில் திருத்தேரியில் நடந்த கொடியேற்று விழாவுக்கு, சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி செயலாளர் கே.பி.ராஜன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கதிரவன், கலைவாணி உள்பட கலந்து கொண்டனர்.

 செங்கல்பட்டு நகர திமுக சார்பில் செங்கல்பட்டு பைபாஸ் சாலையில், நகர செயலாளர் நரேந்திரன் தலைமையில் கொடியேற்று விழா நடந்தது. இதில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுயர மாலை, கிரீடம் அணிவித்து வீரவாள் பரிசளிக்கப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் தமிழ்மணி, பொதுக்குழு உறுப்பினர் அன்புசெல்வன், ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம், நகர நிர்வாகிகள் திருவள்ளுவன், ராஜி, சந்தோஷ் கண்ணன், மகளிரணி சந்தியா, மீரா, இளைஞரணி அவைத்தலைவர் சென்னாகுப்பம் சிலம்புசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 திருப்போர் ஒன்றியம் தையூர், நாவலூரில் ஒன்றிய செயலாளர் இளையவர்மன் தலைமையிலும், குன்றத்தூர் ஒன்றியம் வஞ்சிவாஞ்சேரியில் படப்பை மனோகரன் தலைமையிலும் கொடியேற்று விழா நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் ரூ.146 கோடியில் 1050 பாலங்கள்



  • போக்சோ சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்... விஜயகாந்த் வரவேற்பு



  • தமிழகம் முழுவதும் 105 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்



  • மு.க.ஸ்டாலின் மீது போலீசார் திடீர் வழக்குப்பதிவு



  • நீட் தேர்வின் கொலைப் பசிக்கு மற்றொரு மாணவியும் இரையானாள்: தொடரும் ‘நீட்’ பலிகள்



  • ‘சொமாட்டோ டெலிவரி விவகாரம்’ மதம் பார்ப்பவர்களுக்கு சாப்பாடு இல்லை



  • நாளை ஆடிப்பெருக்கு விழா... திருச்சி காவிரி படித்துறைகளில் முன்னேற்பாடு தீவிரம்



  • 33வது நாளான இன்று மிளகாய் நிற பட்டுடுத்தி அத்திவரதர் அருள்பாலிப்பு



  • ஆபரண தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.496 உயர்ந்தது



  • வேலூர் மக்களவை தொகுதியில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]