இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காதலிக்கு வேறொருவருடன் திருமணம் மண்டபம் எதிரே தீக்குளித்த சென்னை வாலிபர் சாவு

7/10/2025 3:20:08 PM
33வது நாளான இன்று மிளகாய் நிற பட்டுடுத்தி அத்திவரதர் அருள்பாலிப்பு ஆபரண தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.496 உயர்ந்தது

வந்தவாசி: காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நடந்ததால், அதிர்ச்சியடைந்த காதலன் மண்டபத்திற்கு வெளியே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சந்துரு(28). இவர் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அப்போது சந்துருவுக்கும், ஒரகடம் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண்ணுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. நாளடைவில் நட்பு காதலாக மாறி, ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தார்களாம். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களது காதல் சில மாதங்களுக்கு முன்பு இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இவர்களது காதலுக்கு, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்தனர். கடந்த 2ம்தேதி இவர்களது திருமணம் வந்தவாசியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடத்த முடிவு செய்தனர். காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெற இருப்பதை அறிந்த சந்துரு அதிர்ச்சியடைந்தார். இதனால் மனமுடைந்த அவர், கடந்த 2ம் தேதி அதிகாலை 5 மணியளவில், காதலிக்கு திருமணம் நடைபெற இருந்த மண்டபத்திற்கு எதிரே ெசன்றார். அங்கு தான் எடுத்து வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தனக்குதானே தீ வைத்துக்கொண்டாராம். தீ உடல் முழுவதும் பரவியதில் அலறி துடித்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், சந்துருவை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சந்துரு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சந்துருவின் தந்தை ஆறுமுகம் வந்தவாசி தெற்கு போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் ரூ.146 கோடியில் 1050 பாலங்கள்



  • போக்சோ சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்... விஜயகாந்த் வரவேற்பு



  • தமிழகம் முழுவதும் 105 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்



  • மு.க.ஸ்டாலின் மீது போலீசார் திடீர் வழக்குப்பதிவு



  • நீட் தேர்வின் கொலைப் பசிக்கு மற்றொரு மாணவியும் இரையானாள்: தொடரும் ‘நீட்’ பலிகள்



  • ‘சொமாட்டோ டெலிவரி விவகாரம்’ மதம் பார்ப்பவர்களுக்கு சாப்பாடு இல்லை



  • நாளை ஆடிப்பெருக்கு விழா... திருச்சி காவிரி படித்துறைகளில் முன்னேற்பாடு தீவிரம்



  • 33வது நாளான இன்று மிளகாய் நிற பட்டுடுத்தி அத்திவரதர் அருள்பாலிப்பு



  • ஆபரண தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.496 உயர்ந்தது



  • வேலூர் மக்களவை தொகுதியில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]