கங்கையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
7/9/2025 4:41:59 PM
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரின் பாபுபூர்வா பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள், அங்குள்ள கங்கை ஆற்றில் நேற்று மாலை குளிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கங்கை ஆற்றில் சிறுவர்கள் மூழ்கினர். தகவலறிந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், 3 சிறுவர்களின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டன. விசாரணையில் சிறுவர்களின் வயது 12 முதல் 15 வயதுடையவர்கள் என தெரியவந்தது. மற்ற இரு சிறுவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.