ஏலச்சீட்டு நடத்தி 62 லட்சம் மோசடி
7/9/2025 4:39:09 PM
கடலூர்: கடலூர் திருப்பாதிரிபுலியூர் சங்கரநாராயணன் தெருவை சேர்ந்தவர் சாந்திலால் ெஜயின் (66). நகை விற்பனையாளர். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (61). இவர் அழகப்பா என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் பல்வேறு வகைகளில் நகை ஏலச்சீட்டுகளும் நடத்தி வந்தார்.
இதில் சாந்திலால் ஜெயின் 6 சீட்டுக்கான நகை ஏலச்சீட்டு தொகை செலுத்தி வந்தார். இதில் 62 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையில் அதற்கான முதிர்வு தொகையை ராஜகோபாலிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பல நாட்களாகியும் நகை, பணத்தை கொடுக்கவில்லை. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் ராஜகோபாலை கைது செய்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.