வீட்டில் 10 பவுன் கொள்ளை : ஆவடி அருகே துணிகரம்
7/9/2025 4:22:25 PM
ஆவடி: ஆவடி அருகே நந்தவனமேட்டூர், வஉசி தெருவை சேர்ந்தவர் நிர்மலா (48). இவர் அம்பத்தூரில் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவரது கணவர் சத்தியதேவ். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்தாண்டு சத்தியதேவ் இறந்தார். நேற்று சத்தியதேவ்வின் முதலாண்டு நினைவு தினம் என்பதால் மகனுடன் நேற்று காலை 8.30 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு, சேக்காடு பகுதியில் உள்ள கணவரின் கல்லறைக்கு நிர்மலா சென்றார். பின்னர் கல்லறைக்கு மாலை அணிவித்து செலுத்தினர். இதன்பிறகு அதே பகுதியில் உள்ள சர்ச்சில் பிரார்த்தனைக்கு சென்றனர்.
அங்கிருந்து காலை 10 மணியளவில் இருவரும் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது பார்த்து திடுக்கிட்டனர். வீட்டின் உள்ளே சென்றுபார்த்தபோது, பீரோவை மர்ம நபர்கள் திறந்து, அதில் வைத்திருந்த 10 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.இதுபற்றி ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.