புழல் செக்போஸ்ட்டில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
7/9/2025 4:13:43 PM
புழல்: புழல் செக்போஸ்ட் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை புழல் செக்போஸ்ட், ஜிஎன்டி சாலை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (41). இவர் தனது வீட்டின் முன்புறம் டிபன் மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று கடையை பூட்டிக்கொண்டு, சென்னை வள்ளலார் நகரில் உள்ள சர்ச்சுக்கு சென்றார். அங்கிருந்து நேற்றிரவு குடும்பத்துடன் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியானார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் உடைக்கப்பட்டு அதில் ைவத்திருந்த கால் சவரன் தங்க மோதிரம், 2 வெள்ளி கொலுசு மற்றும் ₹10 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், புழல் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.