30ம் ஆண்டு துவக்க விழா ஒரு மாதம் நலத்திட்ட உதவிகள்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாமக தீர்மானம்
7/9/2025 4:12:29 PM
திருவள்ளூர்: பாமக 30ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில், ஒரு மாதத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில், திருவள்ளூர், பூந்தமல்லி தொகுதி ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் கூட்டம் மணவாளநகரில் நேற்று நடைபெற்றது. மாநில துணை பொது செயலாளர் வ.பாலயோகி தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் நா.வெங்கடேசன், இ.தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பூபதி வரவேற்றார்.
கூட்டத்தில், ‘பாமக 30ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், இனிப்பு வழங்குவது, அனைத்து பள்ளிகளிலும் மரக்கன்று நட்டு பசுமை புரட்சி ஏற்படுத்துவது, மாதம் முழுவதும் கிராமங்கள்தோறும் கல்வெட்டு அமைத்து கொடியேற்றி அன்னதானம் வழங்குவது, புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில், மாநில நிர்வாகிகள் எஸ்.ஐ.செல்வம், கேசவன், மாவட்ட நிர்வாகிகள் குமார், வாசுதேவன், தேவராஜ், கார்த்தி, மோகன்குமார், ஒன்றிய, நகர நிர்வாகிகள் கேசவன், சங்கர், மோகனன், எல்லப்பன், சண்முகம், தியாகு, மகளிரணி நிர்வாகிகள் ராஜலட்சுமி, குமாரி, புவனா, கலா உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.