பாஜ கூட்டணி தொடரும்: பீகார் முதல்வர் பேச்சு
7/9/2025 3:43:47 PM
புதுடெல்லி: ஐக்கிய ஜனதா தள கட்சியின் ேதசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில், கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் பேசியதாவது:
ஐக்கிய ஜனதா தள கட்சியை யாராலும் அழிக்க முடியாது. ேஜடியுவை ஓரம் கட்ட நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது. ஊழல், மதவாதம், குற்றங்கள் ஆகியவற்ைற ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. பாஜவுக்கும், ேஜடியுவுக்கும் கொள்ைக அளவில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன.
பாஜ கட்சியுடன் ேஜடியு இணைந்துவிடவில்லை. இதற்கு முன்பு ேசாஷலிச கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இன்றும் கூட பாஜவுடன் ஜேடியுவின் கூட்டணி தொடரும். எனினும், ேஜடியு கட்சி தனித்துவத்துடன் செயல்படும். மக்களவை ேதர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து, பாஜ கட்சி எங்களிடம் ேபசவில்லை. பேசும்போது எங்களது முடிவை தெரிவிப்ேபாம். இவ்வாறு அவர் பேசினார்.