தோழியை பலாத்காரம் செய்தார் மகள் புகாரில் தந்தை கைது
7/9/2025 3:40:41 PM
குருகிராம்: ஹரியானா மாநிலம், குருகிராம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், 2ம் ஆண்டு சட்டம் படித்து வருகிறார். இவருக்கு 3 வயதில் இருந்தே நெருங்கிய தோழி ஒருவர் உள்ளார். அவரது தந்தை தொழிலதிபர். பெலேர் பகுதியில் உள்ள தோழியின் வீட்டில் பல நாட்கள் மாணவி தங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், மாணவியை தொழிலதிபர் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து, மாணவியும், அவரது தாயும், தொழிலதிபரின் மகளும் போலீஸில் புகார் அளித்தனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி கூறியிருப்பதாவது:கடந்த சில நாட்களுக்கு முன், என்னையும், என் தோழியையும் இரவு உணவுக்கு, அவரது தந்தை ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு கட்டாயப்படுத்தி இருவரையும் மது அருந்த செய்தார். அதன்பின் வீட்டுக்கு சென்றோம். நானும் என் தோழியும் ஒரு அறையில் தூங்கினோம். அதிகாலை 4 மணிக்கு மேல், என் தோழியின் தந்தை எங்கள் அறைக்கு வந்து, என்னை பலாத்காரம் செய்தார். அதன்பின், நான் தோழியிடம் நடந்த விஷயத்தை கூறினேன். இருவரும், என் தாயிடம் நடந்த விவரங்களை கூறினோம். மூவரும் சேர்ந்து குருகிராம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தோம். இவ்வாறு மாணவி கூறியுள்ளார்.இதற்கிடையே, தொழிலதிபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.