சிகிச்சைக்காக விஜயகாந்த் நாளை அமெரிக்கா பயணம்
7/6/2025 3:31:54 PM
சென்னை: சிகிச்சைக்காக விஜயகாந்த் நாளை அமெரிக்கா செல்கிறார். தொண்டர்கள் யாரும் விமான நிலையம் வர வேண்டாம் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் உடல்நலம் தேறி கடந்த புதன்கிழமை சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தேமுதிக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தற்போது அவர் பேசுவதற்கு அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் நாளை அமெரிக்கா செல்கிறார். அங்கு தங்கியிருந்து அவர் சிகிச்சை ேமற்கொள்கிறார்.
இதுதொடர்பாக தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘தேமுதி கழக நிறுவன தலைவர் விஜயகாந்த் 7ம் தேதி (நாளை) சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். வழியனுப்புவதற்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விமான நிலையத்திற்கு யாரும் வரவேண்டாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து வந்ததும் செப்டம்பர் மாதத்தில் தேமுதிக மாநாடு நடக்கிறது. இதில் விஜயகாந்த் பங்கேற்று பேசுவார். இந்த மாநாடு அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்’’ என்று தேமுதிக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.