பி.ஆர்க் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 15ம் தேதி கடைசி நாள்: அண்ணாபல்கலைக்கழக அதிகாரிகள் தகவல்
7/5/2025 3:15:48 PM
சென்னை: தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம், இணைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், அரசு இன்ஜினியரிங் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகங்கள், பல்கலை. உறுப்புக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் சரண்டர் செய்யப்பட்ட பி.ஆர்க் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். http://www.tnea.ac.in/barch2018 அல்லது www.annauniv.edu/barch2018 ஆகிய இணைதளங்களிலும், 42 இணைய சேவை மையங்களிலும் விண்ணப்பித்தல் நேற்று தொடங்கியது.
ஜூலை 15ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 100ம், எஸ்சி/எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு 250ம், பிற மாணவர்களுக்கு 500ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கட்டணத்தை இணையதள வங்கி சேவை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தலாம். இதுதொடர்பான கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதளம், 044-22359901-20 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிந்துகொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்பு நாள், நேரம் உள்ளிட்டவை மாணவர்கள் அளிக்கும் இ-மெயில் முகவரிக்கு அனுப்பப்படும். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.