இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பெட்ரோல் பங்க்கில் தகராறு போலீஸ்காரர் பல் உடைப்பு: 2 பேர் கைது

7/5/2025 3:13:24 PM
33வது நாளான இன்று மிளகாய் நிற பட்டுடுத்தி அத்திவரதர் அருள்பாலிப்பு ஆபரண தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.496 உயர்ந்தது

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மூர்க்க விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(35). திருவாரூரில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிகிறார். இவர் நேற்று இரவு பைக்குக்கு பெட்ரோல் நிரப்ப, மன்னார்குடி ருக்மணி குளம் அருகே உள்ள பங்க்குக்கு வந்தார். அப்போது ஒரே பைக்கில் வந்த சேரன்குளத்தை சேர்ந்த அறிவுமதி(19), பாலமுருகன்(19), பரத்(20) ஆகியோர் தங்கள் பைக்குக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டிருந்தனர். பெட்ரோல் நிரப்பி முடிந்ததும், அவர்கள் மெதுவாக கிளம்பி உள்ளனர். வேகமாக கிளம்பி செல்லுங்கள் என போலீஸ்காரர் பிரபாகரன் ஒருமையில் பேசி உள்ளார். அவர் மாற்று உடையில் இருந்ததால், போலீஸ்காரர் என தெரியாமல் ஏன் ஒருமையில் பேசுகிறீர்கள் என 3 பேரும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி 3 பேரும் சேர்ந்து கல் மற்றும் கைகளால் பிரபாகரனை அடித்து உதைத்தனர். இதில் அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. 2 பல் உடைந்து விழுந்தது. சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிரபாகரன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அவர் அளித்த புகாரின் பேரில், மன்னார்குடி போலீசார் அறிவுமதி, பாலமுருகன் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். பரத்தை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • பள்ளிப்பட்டு அருகே சமூக விரோதிகள் கூடாரமான மகளிர் சேவை மைய கட்டிடம்



  • நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் தட்டிகேட்ட ஆசிரியருக்கு அடி, உதை



  • திருமணமான 20 நாட்களில் காதல் கணவரை உயிரோடு எரித்து கொன்ற மனைவி



  • தகாத உறவை பார்த்ததால் ஆத்திரம் பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை



  • கடனை திருப்பி தராததால் ஆத்திரம் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை



  • கோயம்பேடு பஸ் நிலையத்தில் கஞ்சா பொட்டலம் பறிமுதல்



  • ஆட்டோவில் சவாரி ஏற்றுவது போல் பயணிகளிடம் திருடிய கும்பல் கைது



  • கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளிடம் வழிப்பறி செய்த திருடர்கள் 35 பேர் சிக்கினர்



  • வனப்பகுதியில் போலீசாருடன் துப்பாக்கி சண்டை மாவோயிஸ்ட் இயக்க மாவட்ட செயலாளர் பலி



  • கொலை செய்யப்பட்டதாக புகார்... இளம்பெண் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]