கும்பாபிஷேகம்
6/29/2018 5:00:49 PM
காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அடுத்த பல்லகாந்தூர் ரேணுகாம்பாள் படவேட்டம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவையொட்டி கணபதி ஹோமம், கோபூஜை, தனபூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தனம், யாகசாலை பிரவேசம், பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடந்தது. இதைத்தொடர்ந்து புண்யாகவாசனம், விசேஷ சாந்தி, 2ம் யாகசாலை பூஜை, மூலஸ்தான மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் நடந்தது.
புதன்கிழமை யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாஹூதிக்கு பின்னர் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு பரிவார மூர்த்திகள் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு கும்பாபிஷேகம், நடந்தது. கோபுர கலசங்களில் சிவாச்சார்யார்கள் ராமநாதன், கந்தசாமி மற்றும் கனகராஜ், ரங்கநாதன் ஆகியோர் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.