வீட்டில் தனியாக இருந்த நண்பரின் மனைவியை கற்பழித்த வாலிபர்கள் 2 பேர் கைது
6/27/2018 3:34:15 PM
முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு படித்துறை பகுதியில் வசிப்பவர் முருகானந்தம்(24). இவர் திருப்பூரில் வேலை பார்த்தபோது தன்னுடன், வேலை பார்த்த முருகவள்ளி(20) என்பவரை காதலித்து 5 மாதத்துக்கு முன் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் ஆலங்காடு வீட்டில் வசித்து வருகின்றனர். முருகவள்ளி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் முருகானந்தத்தின் நண்பர்கள் பேட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பூவரசன்(23), ஜாம்புவானோடையை சேர்ந்த மாரிமுத்து மகன் நித்தியானந்தன்(25) ஆகியோர் நேற்று பேட்டை கோயிலில் நடந்த திருவிழாவிற்கு முருகானந்தத்தை அழைத்து சென்றனர்.
அங்கு முருகானந்தத்தை திசை திருப்பி கூட்டத்தில் விட்டுவிட்டு, பூவரசன், நித்தியானந்தன் ஆகியோர் முருகானந்தம் வீட்டிற்கு சென்றனர். அங்கு தனியாக இருந்த முருகவள்ளியை அவர்கள் வலுக்கட்டாயமாக மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். முருகவள்ளி சத்தம் போட்டதால், அவரது வாயில் துணியை வைத்து அமுக்கி பலாத்காரம் செய்துள்ளனர். பூவரசன், நித்தியானந்தன் ஆகியோரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.