18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு நீதிமன்றம் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது
6/18/2018 4:05:58 PM
அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் இன்று கூறியதாவது: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பு, நீதித்துறை மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. மூன்றாவது நீதிபதி அமர்வை உடனடியாக அமைத்து, உரிய காலத்திற்குள் இறுதி தீர்ப்பை வழங்க வேண்டும். மழைக்காலத்தில் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறப்பது போல், இயல்பாக மாதந்தோறும் தண்ணீர் திறக்க மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்த வேண்டும். காவிரியில் உரிய காலத்தில் தண்ணீர் வராததால் டெல்டா விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும். டெல்லி சென்ற முதல்வர், பிரதமரிடம் தமிழகத்திற்கு வேண்டிய நிதியை கேட்டு பெற வேண்டும். மேலும் காவிரி பிரச்னை, நீட் தேர்வுக்கு தீர்வு காண வேண்டும்.