கேரளாவில் நிலச்சரிவு பலி எண்ணிக்கை 13 ஆனது
6/18/2018 4:05:16 PM
திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த கனமழையால் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி அருகே கப்பிப்பாறை கரிஞ்சோலை மலைப் பகுதியில் கடந்த வாரம் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 4 வீடுகள் முழுவதுமாக மண்ணுக்கு அடியில் புதைந்தது. இந்த சம்பவத்தில் அந்த வீட்டில் இருந்த 14 பேர் உயிரோடு புதைந்தனர்.
இதையடுத்து பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த தினத்தன்று 7 உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மற்ற 7 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தினமும் உடல்கள் தேடப்பட்டு வந்த நிலையில் இதுவரை 12 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் நேற்று நிலச்சரிவில் சிக்கி பலியான ஹசன் மனைவி ஆசியா(62) உடல் கிடைத்தது. இதையடுத்து பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இனி அப்துல் ரகுமான் என்பவர் மனைவி நபீசா உடல் மட்டும் கிடைக்க வேண்டி உள்ளது. அவரது உடலை தேடும் பணிகளும் இன்று தீவிரமாக நடந்து வருகிறது.