எம்எல்ஏக்கள் பதவி பறிப்பால் அனாதையான 18 தொகுதிகள்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
6/18/2018 2:35:49 PM
காஞ்சிபுரம்: தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் 18 சட்டமன்ற தொகுதி அனாதை ஆக்கப்பட்டதற்கு மத்தியில் ஆளும் மோடி அரசே காரணம் என காஞ்சிபுரத்தில் சி.வி.எம்.அ.பொன்மொழி படத்திறப்பு நிகழ்ச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் தந்தையும் தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் பதவி வகித்தவருமான சி.வி.எம்.அ.பொன்மொழியின் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை காஞ்சிபுரத்தில் நடந்தது.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ முன்னிலை வகித்தனர். மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ வரவேற்றார்.
காஞ்சிபுரம் பஸ் நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு படத்தை திறந்து வைத்து பேசியதாவது: ஏரியைத் தூர்வாரும் திட்டத்துக்காக காஞ்சிபுரம் வரும்போது பொன்மொழியின் உடல்நலம் குறித்து விசாரித்தபோது தங்குமிடத்துக்கு முதலில் செல்வோம். அங்கு வந்து பார்ப்பதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று சொன்னார். ஆனால் எனக்கு வரவேற்பு கொடுத்த இடத்துக்கே அவர் வந்ததைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நெசவாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் நாட்டு மக்களைப் பற்றி இந்த அரசுக்கு கவலை இல்லை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்று, உயிரிழந்தபிறகு 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட்டு சுயேட்சை வேட்பாளர் தினகரன் வெற்றிபெற்றுள்ளார். இதுதான் தேர்தல் விதிமுறை, தேர்தல் ஆணைய நடைமுறை. ஆனால் 18 தொகுதி எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்பட்டு 10 மாதங்களாக அத்தொகுதிகள் அனாதைகளாக்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் மத்தியில் ஆளும் மோடி அரசே என பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டச்செயலாளர் எ.வ.வேலு, தீர்மானக்குழு உறுப்பினர் மீ.அ.வைத்தியலிங்கம், திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் கும்மிடிப்பூண்டி வேணு, திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர், சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சுதர்சனம் எம்எல்ஏ, மீனவரணிச் செயலாளர் கேபிபி சாமி எம்எல்ஏ, தாம்பரம் நகர செயலாளர் எஸ்ஆர் ராஜா எம்எல்ஏ, பல்லாவரம் நகரச் செயலாளர் கருணாநிதி எம்எல்ஏ, செய்யூர் எம்எல்ஏ ஆர்டி அரசு, மதுராந்தகம் எம்எல்ஏ புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொருளாளர் சுகுமார், துணை செயலாளர் வசந்தமாலா, காஞ்சிபுரம் நகரச் செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் மாநில நெசவாளர் அணி அன்பழகன், வர்த்தக அணி துணைச் செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், தொண்டரணி சுகுமாரன், ஒன்றியச் செயலாளர்கள், பி.எம்.குமார், சிறுவேடல் செல்வம், குமணன், ஞானசேகரன், சாலவாக்கம் குமார், சேகர், சத்யசாய், தம்பு, கண்ணன், கே.எஸ்.ராமச்சந்திரன், ஏழுமலை, பேரூர் செயலாளர்கள் பாண்டியன், உசேன், விஜயகணபதி, பாரிவள்ளல், இனியரசு, மாவட்ட இளைஞரணி அப்துல் மாலிக், துணை அமைப்பாளர்கள் சோபன்குமார், யுவராஜ், பால்ராஜ், ரவிக்குமார், மாணவரணி அபுசாலி, துணை அமைப்பாளர்கள் ஏ.வி.சுரேஷ்குமார், ராம்பிரசாத், ஆனந்தன், சசிக்குமார், ரஞ்சித்குமார், தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் ஜெய்கணேஷ்,
தொமுச சுந்தர வரதன், இளங்கோவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், தசரதன், முருகன், சரவணா பிரதர்ஸ் சரவணன், கணேஷ், நகர நிர்வாகிகள் அவைத்தலைவர் சந்துரு, துணைச்செயலாளர்கள் கருணாநிதி, ஜெகநாதன், பொருளாளர் வெங்கடேசன், ஏ.கே.மகேஷ் ஷா, வக்கீல் சத்தியமூர்த்தி, ஏ.எஸ்.முத்துச்செல்வம், தசரதன், இ.முருகன், எம்.எஸ்.சுகுமார் மற்றும் உறவினர்கள் கோதாவரி பொன்மொழி, தமிழ்ச்செல்வி இளந்திரையன், பார்வேந்தன், மணிமேகலை கமலக்கண்ணன், இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் நன்றி கூறினார்.