தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராஜினாமா
6/4/2025 2:43:49 PM
பெங்களூரு: வட கர்நாடகா காங்கிரஸ் தலைவர், எஸ்.ஆர்.பாட்டீல், தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி முதல்வராக இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 78 இடங்களில் வெற்றி பெற்றது. லிங்காயத் சமூகத்தினர் அதிகம் வாழும் வட கர்நாடகாவில், காங்கிரஸ் மிக குறைவான இடங்களையே பெற்றது. லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அங்கீகரித்தும் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து, வட கர்நாடகா காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த, எஸ்.ஆர்.பாட்டீஸ், தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
இது குறித்து, அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், வட கர்நாடகாவில், காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், யாருடைய தயவும் இன்றி, நாங்கள் தனியாக ஆட்சி அமைத்திருப்போம். எனவே, அந்த தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். ராஜினாமா கடிதத்தை, ராகுலுக்கு அனுப்பி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். பாட்டீலின், ராஜினாமா குறித்து, காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து, இதுவரை கருத்து தெரிவிக்கப்படவில்லை.