2019 மக்களவை தேர்தலில் பிரதமர் பதவி காலியாகாது: மத்திய அமைச்சர் நக்வி பேட்டி
6/4/2025 2:31:43 PM
பனாஜி: அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவி காலியாகாது என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். கோவாவில் பா.ஜ. சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.அரசு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கி வருகிறது. ஊழலற்ற இந்தியாவை உருவாக்க மோடி போராடி வருகிறார். சர்ஜிகல் ஸ்டிரைக் போன்ற முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு எதிராக திரண்டு கூட்டணி அமைத்துள்ள எதிர்கட்சிகளில், 20க்கும் மேற்பட்டோர் பிரதமர் பதவிக்கான கனவுகளில் உள்ளனர். அவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவி காலியாகாது. பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும். மோடியே மீண்டும் பிரதமராவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.