கேரளாவில் நிபா வைரஸ் பலி 16 ஆக உயர்வு
6/1/2025 3:26:19 PM
திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ்க்கு பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. வவ்வால்கள் மூலம் பரவும் நிபா வைரஸின் தாக்கம் கேரளாவில் அதிகம் உள்ளது. குறிப்பாக, கோழிக்கோடு பகுதியில் நிபாவால் அதிகம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் பலியாகி இருந்த நிலையில், கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
நிபா பரவாமல் தடுக்க கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தனிவார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. பறவைகள் கடித்த பழங்களை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும், கடுமையான காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிபா காய்ச்சலுக்கென இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், இது பரவாமல் தடுக்க ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.