உ.பி. மாநிலத்தில் உள்ள அலகாபாத் பெயரை மாற்ற யோகி ஆதித்யநாத் அரசு முடிவு
5/25/2018 3:00:44 PM
அலகாபாத்: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரின் பெயர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேசத்தில் பாஜ ஆட்சி நடக்கிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கிறார். இந்நிலையில் இந்த மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரின் பெயரை, ‘பிரயக்ராஜ்’ என மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த வருடம் நடைபெற இருக்கும் கும்பமேளாவிற்கு முன்னதாக முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அலகாபாத் மாவட்டத்தில், கங்கை, யமுனா, சரஸ்வதி ஆகிய முக்கிய நதிகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் புகழ்பெற்ற புனித தலமாக ‘பிரயக்’ இருந்து வருகிறது. மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறும் புனிதத்தலமாகவும் அறியப்படுகிறது. எனவே அலகாபாத் பெயரை, பிரயக்ராஜ் என மாற்றுவதற்கு மாநில அரசு மாற்ற திட்டமிட்டுள்ளதாக உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா தெரிவித்துள்ளார். மேலும் 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் கும்பமேளாவின் போது வைக்கப்பட உள்ள பதாகைகளில் அலகாபாத்திற்குப் பதிலாக பிரயக்ராஜ் என அச்சடிக்கபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.