பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு எஸ்.வி.சேகர் ஆஜராக கரூர் கோர்ட் உத்தரவு
5/22/2018 3:29:07 PM
கரூர்: பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்வி.சேகர் ஆஜராக வேண்டும் என்று கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் எஸ்வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பதிவிட்டதாக கரூர் குற்றவியல் நீதிமன்றம் 2ல் இந்திய குடியரசு கட்சி (அ) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன், வக்கீல் ராஜேந்திரன் மூலம் வழக்கு தொடந்தார். இவ்வழக்கில் கடந்த 15ம் தேதி தலித் பாண்டியன் மற்றும் சாட்சிகளிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, வழக்கு விசாரணை 18 மற்றும் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று இவ்வழக்கு விசாரைணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, ‘’ நடிகர் எஸ்வி சேகர், ஜூலை 5ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.