மகளை 3 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தை கைது
5/22/2018 3:23:48 PM
திருமலை: பெற்ற மகளை 3 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தையையும் இதை கண்டுகொள்ளாத தாயையும் போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் சந்திரகிரி மண்டலத்தை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் சந்திரகிரி போலீஸ் நிலையத்தில் நேற்று கண்ணீர் மல்க அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: திருப்பதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறேன். டாக்சி டிரைவரான எனது தந்தை தினமும் மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு வருவார். அப்போது மகள் என்றும் பாராமல் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து எதிர்த்த என்னை, எனது பாட்டியை கொலை செய்தது போன்று கொன்று விடுவதாக மிரட்டினார்.
இவ்வாறு என்னை மிரட்டியதால் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை. 3 ஆண்டுகளாக என்னை பலாத்காரம் செய்தார். நடந்த விவரத்தை எனது தாயிடம் தெரிவித்தேன். அவர் கண்டு கொள்ளாமல், தந்தைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கூறினார். இதனால் நான் மனவேதனையடைந்தேன். எனது தந்தை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார். இப்புகாரை பெற்ற போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணின் தந்தை மற்றும் தாயை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.