கர்நாடகா சட்டசபை தேர்தல் : தமிழக எல்லையில் போலீசார் தீவிர வாகன தணிக்கை
5/11/2025 4:39:31 PM
சத்தியமங்கலம்: கர்நாடகா மாநிலத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி பகுதியிலிருந்து கர்நாடகா மாநிலத்திற்குள் செல்லும் 7 வழித்தடங்களில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினரை பணியமர்த்தி தற்காலிக சோதனைச்சாவடிகள் நேற்று இரவு முதல் செயல்பட தொடங்கியுள்ளது.இதில் கேர்மாளம், ராமாபுரம், எல்லக்கட்டை, ஒசூர் பாலம், அருள்வாடி நால்ரோடு, பைனாபுரம் ஆகிய இடங்களில் புதிதாகவும், ஆசனூர் மற்றும் பண்ணாரியில் ஏற்கனவே உள்ள சோதனைச்சாவடிகள் இயங்குகின்றன. கர்நாடகா நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர வாகன தணிக்கைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்களில் கணக்கில் வராத பணம், மதுபானங்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா எனவும் வாகனங்களில் செல்வோர் எங்கு எதற்காக செல்கின்றனர் என்பது குறித்தும் வாகன பதிவெண் விபரங்களை பதிவு செய்தபின் வாகனங்களை அனுமதிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.