உள்நாட்டிலேயே விமான உற்பத்தி: மத்திய அரசு முடிவு
4/27/2018 2:33:02 PM
புதுடெல்லி: நமது நாட்டிலேயே விமானங்களையும் உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், ‘‘விமானங்கள், அதன் உதிரிபாகங்கள் ஆகியவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. விமான சேவை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. விமான போக்குவரத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை போன்று விமான தயாரிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இதில் தனியார் நிறுவனங்களுக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது’’ என்றார்.