வடபழனி பெண் கொலையில் திடீர் திருப்பம்: நண்பருடன் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் கைது
4/9/2025 4:30:08 PM
சென்னை: வடபழனியில் கை, கால்கள் கட்டிப்போட்டு பெண் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக கணவரே நண்பருடன் சேர்ந்து அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து கோயில் குருக்கள் உட்பட 2 பேரை போலீசார் கைது ெசய்தனர்.
சென்னை வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலகணேஷ்(27). வடபழனி சிவன் கோயில் குருக்களாக வேலை செய்து வரும் இவர், மனைவி ஞானபிரியா(24) உடன் வசித்து வருகிறார். கடந்த புதன்கிழமை வழக்கம் போல் பாலகணேஷ் கோவிலில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இரவு கணவன், மனைவி இருவரும் உணவு அருந்திவிட்டு தூங்கி விட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி கழிவறைக்கு செல்ல வந்தபோது, பாலகணேஷ் கை கால்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் கழிவறையில் கிடந்தார். உடனடியாக பாலகணேஷ் மனைவி ஞானபிரியாவுக்கு தகவல் தெரிவிக்க வந்தபோது வீட்டின் படுக்கை அறையில் ரத்த வெள்ளத்தில் ஞானபிரியாவும் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீடு முழுவதும் ஆய்வு செய்தனர். அப்போது உயிருக்கு போராடி கொண்டிருந்த பாலகணேஷை மீட்டு சிகிச்ைசக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஞானபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த கொலை நகைக்காக நடந்தது போன்று தெரியவில்லை. இதனால் கொலையில் பல மர்மங்கள் இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே தீவிர சிகிச்சை பெற்று வந்த பாலகணேசிடம் போலீசார் விசாரணை நடத்தினர். “அப்போது நள்ளிரவு கதவு தட்டும் சத்தம் கேட்ட நான் எழுந்து கதவை திறந்தேன். அப்போது என்னை இரும்பு கம்பியால் இருவர் அடித்தனர். உடனே என் கைகளை கட்டிய போது என் மீது சாமி வந்ததது ேபான்று இருந்தது. பின்னர் வீட்டில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
காலையில் என்ைன போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து ெசல்லும் ேபாது நிைனவு திரும்பியதும் எனது மனைவி கொலை செய்யப்பட்டார் என்பது எனக்கு தெரியும்” என்று கூறியிருந்தார். தலையில் பலமாக அடிப்பட்டுள்ளதால் அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்து வருகிறார். இதனால் போலீசார் பாலகணேஷிடன் தொடர் விசாரணை நடத்தினால் தான், இந்த கொலை குறித்து முழு விபரமும் தெரியவரும் என்று தெரிவித்திருந்தனர். இதற்கிடையே இவ்வழக்கில் திடீர் திருப்பமாக கணவன் பாலகணேசே தனது நண்பர் தனசேகர் என்பவரின் உதவியுடன் அடித்து கொலை ெசய்தது விசாரணையில் தெரிவியவந்தது. இதையடுத்து போலீசார் வடபழனி சிவன் கோயில் குருக்களான பாலகணேஷ், அவரது நண்பர் தனசேகர் ஆகியோரை இன்று காலை கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து 8 சவரன் நகைகள் பறிமுதல் ெசய்யப்பட்டது.
பாலகணேசனிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாலகணேஷ் தனது மனைவி ஞானபிரியாவை காதலித்து திருமணம் செய்தார். முதலில் இவர்களின் காதலுக்கு பெற்ேறார்கள் எதிர்த்தாலும் பின்னர் சம்மதித்தனர். ஆனால் திருமணம் நடந்து 5 ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அப்போது பாலகணேசுக்கு ஆண்மை சில குறைபாடுகள் இருந்ததாக கூறினர். அதற்கு அவர் மருந்து எடுத்துள்ளார். இதற்கிடைேய அடிக்கடி ஞானபிரியா தனது கணவரை குத்தலாக பேசி வந்துள்ளார். இது பாலகணேசுக்கு பிடிக்கவில்லை.
வழக்கமாக பாலகணேஷ் தினமும் காலை 5.30 மணிக்கு வடபழனி சிவன் கோயிலுக்கு சென்று பகல் 11.30 மணிக்கு வருவார். பிறகு மாலை 3.30 மணிக்கு சென்று இரவு 11 மணிக்கு மேல் தான் வருவார். இதனால் காணவன், மனைவிக்கு இடையே தாம்பத்ய உறவு முறையாக நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஞானபிரியா கணவரை அழைத்தாலும் பல காரணங்களை கூறி பாலகணேஷ் தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஞானபிரியா கேவலமாக பேசியதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் இதுகுறித்து பாலகணேஷ் தனது நண்பர் தனசேகர் என்பவருடன் கூறியுள்ளார். பின்னர் இருவரும் திட்டமிட்டு புதன்கிழமை நள்ளிரவு தனது நண்பர் போரூரை சேர்ந்த தனசேகருடன் சேர்ந்து தனது மனைவி ஞானபிரியாவை சுத்தியால் அடித்து கொலை ெசய்துவிட்டு நண்பர் தனசேகரை இரண்டு பேர்களின் கை மற்றும் கால்களை கட்டிபோட்டுவிட்டு நகைகளை எடுத்து செல்ல பாலகணேஷ் கூறியுள்ளார். அதன்படி தனசேகர் கை, கால்களை கட்டிப்போட்டிவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். பின்னர் தன்னை அடித்து உதைத்து கழிவறையில் வீசிவிட்டு சென்றுவிட்டதாக நடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.