இடுக்கி அருகே சோகம் ஆற்றுக்குள் கார் பாய்ந்து 3 பேர் பலி
4/3/2025 3:43:02 PM
திருவனந்தபுரம்: இடுக்கி அருகே ஆற்றுக்குள் கார் பாய்ந்து கணவன், மனைவி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாலக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜோய் (51). சோடா ெதாழிற்சாலை நடத்தி வந்தார். இவரது மனைவி ஷாலி (47). இவர்களது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி நேற்று மூணாறில் நடந்தது. இந்த நிழ்ச்சியில் பங்கேற்பதற்காக சொகுசு காரில் சென்று கொண்டு இருந்தனர். அவர்களுடன் மகள்கள் ஜிப்னி, ஜிஷ்னா, ஜீனா, ஜீவன், ஜிஷ்னாவின் கணவர் ஜியோ (30), ஜிஸ்னாவின் மகள் சாரா (3) ஆகியோரும் காரில் சென்றனர். நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு திரும்பினர். காரை ஜோய் ஓட்டினார். இரவு சுமார் 8 மணியளவில் இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே தேவியார் ஆற்று பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது. காரின் அனைத்து கதவுகளும் பூட்டப்பட்டிருந்ததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை.
ஜாய் மட்டும் கண்ணாடியை திறந்து வெளியே வந்து சத்தம் ேபாட்டார். அவரது சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதற்குள் ஜோய், ஷாலி, சாரா ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். ஜிப்னி, ஜிஷ்னா, ஜீனா, ஜீவன், ஜியோ ஆகியோர் மீட்கப்பட்டனர். உடனே அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஜிப்னி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.