இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆடிட்டர் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த திருடர்களுக்கு சரமாரி அடிஉதை

3/28/2018 3:19:43 PM
சைதையில் 1000 மழைநீர் தொட்டிகள்: ஆளுங்கட்சி பணிகளை திமுக மேற்கொள்கிறது.. மு.க.ஸ்டாலின் பேச்சு நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது: 14ம் தேதி தேரோட்டம்

ெபரும்புதூர்: வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த திருடர்களை பொதுமக்கள் பிடித்து சரமாரி தாக்கினர். சென்னை தாம்பரம் அருகே ஒரத்தூர் ஊராட்சி, நீடாமங்கலம் கிராமம், எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (68). இவர் ஆடிட்டர். இவரது மனைவி ஜெயந்தி (54). இவர்கள் கடந்த 2 நாளுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு, டெல்லியில் உள்ள மகனை பார்ப்பதற்காக சென்றனர்.இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் இவரது வீட்டில் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தது. டிவி ஓடிக்கொண்டிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் சென்று, சீனிவாசனின் வீட்டு ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். வீட்டின் உள்ளே சந்தேகம்படும்படி 2 பேர் நடமாடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து அவரது வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே பொதுமக்கள் தங்களை பார்த்துவிட்டதால் தப்பியோட வெளியே வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்ததை கண்டு மர்ம நபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அடிப்படையில், எஸ்ஐ சண்முகம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரை்ந்தனர். வீட்டுக்குள் போலீசார் சென்று பார்த்தபோது கொள்ளையடித்த பொருட்களை மூட்டையில் கட்டிவைத்திருந்தனர். பின்னர் ஒரு அறையில் இருந்த கொள்ளையர்களை போலீசார் பிடித்தனர். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், போலீசார் பிடியில் இருந்த கொள்ளையர்களை சரமாரி அடித்து உதைத்தனர். இதில் ஒருவனுக்கு மண்டை உடைந்தது. பின்னர் அவர்களை போலீசார் மீட்டு கொண்டு சென்றனர். படுகாயம் அடைந்தவன் படப்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் செம்மஞ்சேரியை சேர்ந்த ஆனந்த் (41), ரமேஷ் (27) என்பதும் பூட்டியிருக்கும் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்தவர்கள் என்றும் தெரிந்தது.இதனிடையே கொள்ளை நடந்துள்ளது பற்றி டெல்லியில் உள்ள சீனிவாசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • சைதையில் 1000 மழைநீர் தொட்டிகள்: ஆளுங்கட்சி பணிகளை திமுக மேற்கொள்கிறது.. மு.க.ஸ்டாலின் பேச்சு



  • நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது: 14ம் தேதி தேரோட்டம்



  • மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வைகோ, சண்முகம், வில்சன் மனு தாக்கல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு



  • அடுத்த வாரம் பரோலில் செல்ல நளினி முடிவு: கணவர் முருகனுடன் ஆலோசனை



  • மத்திய பட்ஜெட்டில் வரி உயர்த்தப்பட்டதால் ஒரேநாளில் பெட்ரோல் ரூ2.57 டீசல் ரூ2.52 அதிகரிப்பு: அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி விலை உயரும் அபாயம்



  • தேச துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை : 10 ஆயிரம் அபராதம் விதித்து எம்.பி, எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு



  • சென்னை மண்ணடி, பிராட்வே பகுதிகளில் சன் பவுண்டேஷன் சார்பில் குடிநீர் விநியோகம் : பொதுமக்கள் வரவேற்று பாராட்டு



  • ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் சென்னைக்கு குடிநீர்: பணிகள் தீவிரம்



  • ஓணம்பாக்கம் கிராமத்தில் குவாரி நீரை பாழ்படுத்தும் தனியார் : விவசாயிகள் வேதனை



  • பம்மலில் நள்ளிரவு பரபரப்பு வீட்டில் நிறுத்தப்பட்ட 2 பைக் எரிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]