கேரளாவில் ஓகி புயலில் 91 பேர் மாயம் அதிகாரபூர்வ அறிவிப்பு
3/20/2018 3:09:57 PM
திருவனந்தபுரம்: ஓகி புயலில் கேரளாவை சேர்ந்த 91 பேர் மாயமாகி உள்ளனர் என மீன்வளத்துறை அமைச்சர் மெர்சிகுட்டிஅம்மா அதிகாரபூர்வமாக அறிவித்தார்.கேரளா மற்றும் குமரியில் கடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி ஓகி புயல் தாக்கியது. இதில் ஏராளமானோர் பலியானார்கள், பலரை காணவில்லை. இது தொடர்பாக கேரள மீன்வளத்துறை அமைச்சர் மெர்சிகுட்டி அம்மா கூறியுள்ளதாவது: கடந்த ஆண்டு வீசிய ஓகி புயலில் கேரளாவை சேர்ந்த 52 பேர் மரணமடைந்துள்ளனர். 91 பேரை இதுவரை காணவில்லை. முன்பு 103 பேர் காணாமல் போனதாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதில் 6 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த வழக்குகள் குமரி மாவட்ட போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் ஓகி வீசுவதற்கு 3 மாதத்துக்கு முன்பு மாயமானவர்கள். மேலும் 3 பேர் 3 வருடங்களுக்கு முன் மாயமானவர்கள். இதனால் கேரளாவில் ஓகி புயலில் மாயமானவர்கள் எண்ணிக்கை 91 பேர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. இவர்களுக்கான நிவாரண தொகை அவர்களது குடும்பத்துக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.