இன்சூரன்ஸ் தொகையை பெற தொழிலதிபர் கொலை விபத்து நாடகமாடிய மனைவி கள்ளக்காதலன் கைது
3/16/2018 2:56:07 PM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி நேதாஜி நகரை சேர்ந்தவர் மாதேஷன் (45). ஜவுளி தொழில் செய்து வந்தார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
கடந்த மாதம் 27ம் தேதி, தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் டி.குண்டு அருகே சாலையின் நடுவில் மாதேஷன் இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அவர் விபத்தில் இறந்ததாக கூறப்பட்டு வந்தது. இதனிடையே, தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனையின்போது அங்கிருந்த போலீசாரிடம் ரேவதி பல்வேறு கேள்விகளை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதையடுத்து, ரேவதியின் நடவடிக்கையை போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், ரேவதியின் மூத்த மகன் யோகேஸ்வரன், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சென்று தந்தையின் பிரேத பரிசோதனை சான்றிதழை தருமாறு அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டுள்ளார். இந்த தகவலை டாக்டர்கள் காரிமங்கலம் போலீசாருக்கு தெரிவித்தனர். யோகேஸ்வரனிடம் எதற்காக சான்றிதழ் கேட்கிறாய்? என போலீசார் விசாரித்தனர். அப்போது, தந்தையின் பெயரில் இன்சூரன்ஸ் செய்துள்ளோம், அந்த பணத்தை பெறுவதற்கு சான்றிதழ் தேவைப்படுவதாக கூறியுள்ளார்.
இந்த தகவல் போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. பெரியாம்பட்டியில் உள்ள ரேவதி மற்றும் யோகேஸ்வரனிடம் சான்றிதழ் கேட்டது தொடர்பாக போலீசார் விசாரித்தனர். அப்போது, அங்கிருந்த ரேவதியின் மற்றொரு மகன் என்னுடைய தந்தையின் சாவில் மர்மம் உள்ளது என போலீசில் கூறினார். தொடர்ந்து ரேவதி, யோகேஸ்வரன் ஆகியோரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்ேபாது, கள்ளக்காதலன், மகன் உள்பட 5 பேர் இணைந்து கணவர் மாதேஷனை கொன்று சாலையில் வீசியதை ரேவதி ஒப்புக்கொண்டார். அதையடுத்து, ரேவதி, அவரது மகன் யோகேஸ்வரன், கள்ளக்காதலன் ஜெயபிரகாஷ், அவருடைய தம்பி வெங்கடேசன், நண்பர் விக்னேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.ரேவதி அளித்த வாக்குமூலம்; என்னுடைய கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கிடந்தார். விரைவில் அவர் உயிரிழந்து விடுவார் என டாக்டர்கள் கூறினர். இதனால், பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் அவருடைய பெயரில் 5 லட்சம் மதிப்புடைய 2 பாலிசிகளை எடுத்தேன். மற்றொரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 45 லட்சம் மதிப்பில் ஒரு பாலிசியை கணவர் பெயரில் எடுத்து நாமினியாக(வாரிசாக) என்னை நியமித்து கொண்டேன். இதனிடையே, எனக்கும், ஜெயபிரகாஷ் (36) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இந்த விஷயம் என்னுடைய கணவருக்கு தெரியவந்தது. அவர் அதைப்பற்றி கேட்டு என்னை அடிக்கடி சித்ரவதை செய்து வந்தார்.இதனால் அவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டேன். இந்த தகவல் என்னுடைய மகனுக்கும் தெரியும். கடந்த மாதம் 27ம் தேதி தேன்கனிக்கோட்டைக்கு சென்று விட்டு கணவர் மாதேஷன் வீடு திரும்பினார். அவரை கொலை செய்ய திட்டமிட்டு ஜெயபிரகாஷிற்கு போன் செய்தேன்.
பின்னர், தர்மபுரியில் இருந்து ஒரு சொகுசு காரை வாடகைக்கு எடுத்து கொண்ேடாம். கணவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது ஜெயபிரகாஷ், அவர் தம்பி வெங்கடேசன், நண்பர் விக்னேஷ் ஆகியோர் வந்தனர். அவர்கள் துணையுடன் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். என் மகன் ேயாகேஸ்வரனும் தேவையான உதவிகளை செய்தார். அதைதொடர்ந்து, காரிமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அவருடைய உடலை வீசிவிட்டு பின்னர் வீட்டுக்கு திரும்பி விட்டோம். என் மகன் பிரேத பரிசோதனை அறிக்கையை கேட்க சென்றபோது போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்ததில் உண்மையை தெரிவித்து விட்டேன். பணத்திற்கு ஆசைப்பட்டு கணவரை கொலை செய்து விட்டேன். இவ்வாறு ரேவதி வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.