ஜெர்மனி கண்காட்சியில் கரூர் ஜவுளிக்கு மவுசு
1/16/2018 3:46:34 PM
கரூர்: ஜெர்மனி பிராங்க்பர்ட் நகரில் ஆண்டுதோறும் ஜவுளி வாங்குவோர், விற்போர் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் ஜவுளி உற்பத்தி மாதிரிகளுடன் இந்தியாவில் இருந்து ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு கண்காட்சி கடந்த 9ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் இருந்து 250 பேர் பங்கேற்று, தங்களது ஜவுளி மாதிரிகளை காட்சிப்படுத்தினர். கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் ஸ்டீபன் பாபு கூறுகையில், ‘கண்காட்சியில் 3 ஆயிரத்திற்கும்மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தியாவில் இருந்து 352பேரும்,, கரூர் பகுதியில் இருந்து மட்டும் 65 பேரும் கலந்து கொண்டனர். கரூர் ஜவுளிகளின் தரம், வடிவமைப்பு போன்றவை வெளிநாட்டினரை மிகவும் கவர்ந்தது. ஆர்டர்கள் சிறப்பாக தர முன் வந்துள்ளனர். கடந்த ஆண்டு முடிவான விலையைத்தான் வாங்குவோர் இறுதி செய்தனர்’ என்றார்.