இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இந்துக்களுக்கு எதிரானவர் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா : பாஜ தலைவர் அமித்ஷா கடும் தாக்கு

1/11/2025 4:24:10 PM
ஐ.என்.எஸ்.மீடியாவில் அன்னிய முதலீடு அனுமதியில் முறைகேடு ப.சிதம்பரம் வீட்டில் மீண்டும் ரெய்டு: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி பத்மாவாத் திரைப்படத்துக்கு குஜராத் மாநிலத்திலும் தடை: முதல்வர் ரூபானி உத்தரவு

பெங்களூரூ : கர்நாடக மாநில முதல்வர் சித்தராமய்யா இந்துக்களுக்கு எதிரானவர் என பாஜ தலைவர் அமித்ஷா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கர்நாடகா மாநிலத்திற்கு இந்தாண்டு மே மாத வாக்கில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தற்போது இங்கு முதல்வர் சித்தராமய்யா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி இருந்தது. இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க பா.ஜ. வியூகம் வகுத்து வருகிறது.  கர்நாடகாவில் சமீபத்தில் இந்து பிரமுகர்கள் வரிசையாக கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு  பா.ஜ. கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் கட்சியை வலுப்படுத்த கர்நாடகா வருகை தந்துள்ள பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா, சித்ரதுர்கா அருகே ஹோலாகரேவில்நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது காங். முதல்வர் சித்தராமையா இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறார். மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் பா.ஜ.மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் என 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆட்சியில் இந்து தலைவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. நடந்த கொலைகள் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த வேண்டும் என பா.ஜ. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார்.

இதற்கு காங்.முதல்வர் சித்தராமையா சாம்ராஜாநகராவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,பா.ஜ.வின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. இம்மாநிலத்தில் பா.ஜ. ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங்தள் ஆகியவற்றிற்குள் தீவிரவாதிகள் உள்ளனர். மத மோதலை தூண்டும் வகையில் அவர்கள் செயல்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றார்.

மேலும் சில
  • பத்மாவாத் திரைப்படத்துக்கு குஜராத் மாநிலத்திலும் தடை: முதல்வர் ரூபானி உத்தரவு



  • பீகார் முதல்வர் கார் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு: நிதிஷ்குமார் தப்பினார், பாதுகாவலர்கள் காயம்



  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 29ல் துவக்கம்



  • உச்சநீதிமன்ற குழப்பங்கள் சில நாட்களில் சரியாகிவிடும்: மத்திய அரசின் தலைமை வக்கீல் நம்பிக்கை



  • உலக தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடி



  • பஞ்சாப்பில் உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு கேட்டு திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித சேவை, விஐபி டிக்கெட் விலை உயர்த்த ஆலோசனை



  • சபரிமலையில் நாளை மறுநாள் மகரவிளக்கு பூஜை: சன்னிதானத்துக்கு திருவாபரணம் பயணம்



  • ரூ.3500 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துக்கள் முடக்கம்: வருமான வரித்துறை அதிரடி



  • ஆளும் கட்சி எம்எல்ஏ தீவிரவாதிகளுக்கு புகழாரம்: பாஜ கண்டனம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]