2017ம் ஆண்டில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 138 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொலை
1/11/2025 3:45:28 PM
ஸ்ரீநகர் : கடந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைப் பகுதியான காஷ்மீருக்குள் அத்து மீறி நுழைந்த 138 பாகிஸ்தான் ராணுவ வீரர்களை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர். அதே போல பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 28 இந்திய வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீரில் தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது. பயிற்சி பெற்ற தீவிரவாத கும்பல்கள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயலும் போது இந்திய ராணுவத்தினரின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் . அப்போது நடைபெறும் துப்பாக்கி சண்டையில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஓரு ஆண்டில் இது போன்ற மோதல்களில் 138 பாகிஸ்தான் வீரர்களை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றிருப்பதாக இந்திய ராணுவ தலைமை அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தரப்பில் 28 வீரா்கள் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இந்திய பாகிஸ்தானிய எல்லையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 860 துப்பாக்கி சண்டைகள் நடந்துள்ளன. அதில் பெரும்பாலான சண்டைகளின் முடிவுகள் உயிர்பலியிலே முடிந்துள்ளது. இரு நாட்டு எல்லைகளுக்கிடையான துப்பாக்கி சண்டையில் இந்திய எல்லைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்படும் சண்டகளில் பெரும்பாலும் இருநாடுகளுக்கிடையேயான எல்லைப் பகுதிகளை விரிவாக்கம் செய்ய ஏற்படும் போது நடந்த தாக்குதல்கள்தான் அதிகம் என கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான போர் ஒப்பந்தங்களை மீறி எல்லைக்குள் ஊடுருவும் வழக்கத்தை பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் , அந்நாட்டு தீவிரவாதிகளும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக இந்திய அரசு கூறியதை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.
மேலும் எல்லைகளைப் பிடிப்பதில் ஏற்படும் சண்டையில் பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளையும் அனுப்பி வருவதாக இந்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. கடந்த டிசம்பர் 25 ம் தேதி இந்திய ராணுவத்தினர் காஷ்மீர் எல்லைப் பகுதியில் சோதனையில் மேற்கொண்ட போது இந்திய எல்லையில் பதுங்கி இருந்த 3 பாகிஸ்தானிய ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றது. இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவம் அவர்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பின்பு அதை நீக்கியது குறிப்பிடத்தக்கது.