இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

மல்யுத்த களத்தில் பயங்கர மோதல் விளக்கம் கேட்டு சுஷில் குமாருக்கு நோட்டீஸ்: டபிள்யூ.எப்.ஐ வழங்கியது

1/5/2025 3:45:06 PM
ஐ.என்.எஸ்.மீடியாவில் அன்னிய முதலீடு அனுமதியில் முறைகேடு ப.சிதம்பரம் வீட்டில் மீண்டும் ரெய்டு: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி பத்மாவாத் திரைப்படத்துக்கு குஜராத் மாநிலத்திலும் தடை: முதல்வர் ரூபானி உத்தரவு

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில், வரும் ஏப்ரல் மாதம் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான மல்யுத்த வீரர்கள் தேர்வு, புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது. 2008 (பெய்ஜிங், வெண்கலம்), 2012ம் (லண்டன், வெள்ளி) ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற சுஷில் குமார், 74 கிலோ எடை பிரிவில் தேர்வு பெற்றார். அரையிறுதியில், அவரிடம் பர்வீன் ராணா தோல்வியை சந்தித்திருந்தார். இதனால் போட்டி நடைபெற்ற மைதானத்தில், சுஷில் குமார், பர்வீன் ராணா ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. போட்டியின்போது, சுஷில் குமார் தன்னை கடித்ததாகவும், அவரது ஆதரவாளர்கள் தன்னையும், தனது சகோதரரையும் தாக்கியதாகவும், பர்வீன் ராணா புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், சுஷில் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யூ.எப்.ஐ) விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுஷில் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, டபிள்யூ.எப்.ஐ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘’பர்வீன் ராணா தெரிவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். மோதல் சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு சுஷில் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இதற்கு பதிலளிக்க மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். தற்போது வரை சுஷில் குமார் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை’’ என்றார்.

மேலும் சில
  • 3 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய அணியில் இடம் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை: கேமரூன் ஒயிட் உற்சாகம்



  • நான் கனவு கண்டது போல் முதல் டெஸ்ட் அமையவில்லை: பும்ரா வருத்தம்



  • செஞ்சூரியனில் நாளை 2வது டெஸ்ட் தொடக்கம் இந்திய அணி பதிலடி கொடுக்குமா?: தெ.ஆப்ரிக்காவின் மிரட்டல் பந்து வீச்சால் நெருக்கடி



  • 20 விக்கெட்களை வீழ்த்தி என்ன பயன்? முன்னெப்ேபாதும் இல்லாத தீவிரத்துடன் விளையாடுங்கள்: இந்திய வீரர்களுக்கு கோஹ்லி வலியுறுத்தல்



  • தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோல்வி ரஹானேவுக்கு பதில் ரோகித் சர்மாவை தேர்வு செய்ய காரணம் என்ன?



  • கேப்டவுன் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற சிறந்த வாய்ப்பு: அஜய் ஜடேஜா பேட்டி



  • நியூசிலாந்து தொடரில் 4 இன்னிங்சில் 38 ரன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற வேண்டிய நெருக்கடியில் கெய்ல்?



  • ஆஷஸ் கடைசி டெஸ்ட் இங்கி. 346 ரன்னில் ஆல்அவுட்



  • இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் ஒவ்வொரு நாளும் இறுதி சீசன் முக்கியமானது: மோர்கல்



  • தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் 2013ம் ஆண்டு அனுபவம் உதவும்: ரஹானே நம்பிக்கை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]