இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் காங்கிரசில் இணைய வேண்டும்

12/31/2017 4:27:22 PM
திருடர்களிடம் ஓட்டை விற்று பிச்சை எடுத்தனர் ஆர்கே நகர் மக்கள் மீது கமல்ஹாசன் கடும் தாக்கு ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போது சுயநினைவுடன் இருந்தாரா ஜெ.வை பார்த்த முக்கிய பிரமுகர்கள் யார் யார்?

புதுடெல்லி: குஜராத் துணை முதல்வர் நிதின் படேல், காங்கிரசில் இணைய வேண்டும் என ஹார்திக் படேல் அழைப்பு விடுத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், 99 இடங்களை கைப்பற்றிய பாஜ 6வது முறையாக ஆட்சி அமைத்தது. 77 இடங்களை பிடித்த காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. குஜராத் முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக நிதின் படேலும் பதவியேற்ற நிலையில், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த முறை துணை முதல்வராக இருந்த போது நிதின் படேலுக்கு நிதித்துறை, நகர்ப்புற மேம்பாடு, மருத்துவ கல்வி ஆகிய முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் இம்முறை இந்த துறைகளில் ஒன்றுகூட அவருக்கு ஒதுக்காததால், நிதின் படேல் அதிருப்தி அடைந்தார்.

கொடுக்கப்பட்ட இலாகாக்களை பொறுப்பேற்காமல் புறக்கணித்துள்ளார். கட்சிக்கு எதிராக நிதின் படேல் போர்கொடி உயர்த்தியுள்ள நிலையில், இதை காங்கிரஸ் சாதகமாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைக்க 12 இடங்களே தேவைப்படுவதால், நிதின் படேல் மற்றும் அதிருப்தியில் இருக்கும் பாஜ எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. துணை முதல்வர் நிதின் படேல், காங்கிரசில் இணைய வேண்டும் என படேல் சமூக தலைவர் ஹார்திக் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘படேல் சமூகத்தை பாஜ தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. துணை முதல்வர் நிதின் படேல், 10 எம்எல்ஏக்களுடன் வந்து காங்கிரசில் இணைய வேண்டும். காங்கிரசில் இணைந்தால் உரிய மதிப்பு கொடுக்கப்பட்டு, தகுதியான பதவி வழங்கப்படும்’’ என்றார்.
பாஜவின் நம்பிக்கைக்கு உரியவரான நிதின் படேல், கட்சியை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டார் என்று பாஜ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நிதின் படேலை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் பாஜ தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சில
  • மகாராஷ்டிரா கலவரம் எதிரொலி : குஜராத்திலும் வன்முறை பரவியது



  • டெல்லி சாமியார் ஆசிரமத்திலிருந்து 41 சிறுமிகள் மீட்பு: சிபிஐ விசாரணை



  • குஜராத்தில் கொடூரம் : தலித் என்பதால் காலணிகளை நாக்கால் சுத்தம் செய்ய வைத்த போலீசார்



  • டெல்லி மாநிலங்களவை தேர்தல் : தொழில் அதிபர் உள்பட 3 வேட்பாளர்கள் அறிவிப்பு



  • புளூவேல் விளையாட்டால் யாரும் சாகவில்லையாம் : நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்



  • மகாராஷ்டிரா கலவரம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு



  • மகாராஷ்டிராவில் வன்முறை எதிரொலி : தானேயில் 144 தடை உத்தரவு



  • கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கான தண்டனை நாளை அறிவிப்பு



  • தாஜ்மகாலை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு : தினமும் 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி



  • டெல்லியில் கடும் பனிமூட்டம் விமானம், ரயில் சேவை பாதிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]