இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

செங்கல்பட்டு அருகே சோகம் பைக் மீது லாரி மோதல் 2 எஸ்ஐ பரிதாப சாவு

12/22/2017 3:35:49 PM
இன்று 13ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி குஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்றார் : பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 எஸ்ஐ பரிதாபமாக இறந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. எஸ்.ஐ.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகள் புவனேஸ்வரி (29), காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கணினி பிரிவில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்தார். காஞ்சிபுரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேசன் (55). இவர் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். கூடுதலாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கணினி பிரிவையும் கவனித்து வந்தார். இவருக்கு தானேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள கணினியில் பழுது ஏற்பட்டால் புவனேஸ்ரியும், வெங்கடேசனும்தான் சரி செய்ய வேண்டும். அந்த வகையில் நேற்று திருப்போரூர் அடுத்த காயார் காவல் நிலையம், மாமல்லபுரம் காவல் நிலையம் ஆகியவற்றில் கணினியில் ஏற்பட்ட பழுதை சரி செய்து விட்டு இவர்கள் இருவரும், இரு சக்கர வாகனத்தில் இரவு 9 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தனர். பழையசீவரம் சாலையில் சென்றபோது, எதிரே திருமுக்கூடலில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு அதிவேகமாக வந்த லாரி கண் இமைக்கும் நேரத்தில், புவனேஸ்வரி, வெங்கடேசன் ஆகியோர் வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து பாலூர் எஸ்ஐ லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதனையில், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிந்தது. இந்த தகவலை அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் அபிமானி, காஞ்சிபுரம் சரக டிஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு டிஎஸ்பி மதிவாணன் மற்றும் ஏராளமான போலீசார், மருத்துவமனைக்கு வந்து இருவரது உடல்களையும் பார்வையிட்டனர். இறந்த இரு காவலர்கள் உடல்களுக்கும் மாவட்டத்தில் இருந்து ஏராளமான போலீசார் வந்து, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய மத்திய பிரதேசத்தை சேர்ந்த லாரி டிரைவர் விஷ்ணு (30) என்பவரை தேடி வருகின்றனர். இவர் செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.

மேலும் சில
  • சுனாமி 13ம் ஆண்டு நினைவு தினம் : கடற்கரையில் கண்ணீர் அஞ்சலி



  • மூன்றரை யூனிட் மணல் ரூ.40 ஆயிரம் : கட்டிட பணி முற்றிலும் முடங்கும் அபாயம்



  • நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை நோக்கிய வகுப்புகளால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கிறது



  • ஆர்.கே.நகர் தோல்வியால் அதிமுக அழிந்து விடாது



  • ஜிஎஸ்டியால் சம்பளம் குறைப்பு எதிரொலி : திண்டுக்கல்லில் 10 ஆயிரம் நெசவாளர்கள் ஸ்டிரைக்



  • ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக்குழு இன்று கேரளா வருகை



  • புழல் சுடுகாட்டில் பரபரப்பு : வங்கி ஏடிஎம் கார்டுகள், பாஸ்புக் எரிப்பு



  • ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் டோக்கன் வழங்காத தகராறில் கூலி தொழிலாளிக்கு சரமாரி அடிஉதை



  • இன்று 13ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி



  • பழனிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர் கூட்டத்தில் பஸ் புகுந்தது 6 பேர் உடல் நசுங்கி சாவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]