இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி 30 அடி பள்ளத்தில் இறங்கிய வேன்: 10 ஐயப்ப பக்தர்கள் காயம்

12/22/2017 3:27:16 PM
இன்று 13ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி குஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்றார் : பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து

சத்தியமங்கலம்: மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி, ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர்.
தெலங்கானா மாநிலம் சித்திபேட் கஜேல் கிராமத்தை சேர்ந்தவர்கள் சாய்நாத் (28), பரத் ரெட்டி (22), சந்தீப் (27), புஜந்தரெட்டி(25), கைலாசம் (24), வெங்கடேஷ் (24), பகீரத் (23), சந்தோஷ்(24), பிரவீன் (22), ஏ.பிரவீன்(24). ஐயப்பனுக்கு மாலை அணிந்திருந்த இவர்கள் 10 பேரும் வேனில் கர்நாடக மாநிலம் மைசூர் சென்றுவிட்டு சபரிமலை செல்வதற்காக சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் நேற்றிரவு 10 மணியளவில் சென்றனர். வேனை ஐதராபாத்தை சேர்ந்த டிரைவர் சிவா(24) ஓட்டினார்.

வேன் 2வது கொண்டைஊசி வளைவு அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச்சுவரில் மோதி 30 அடி பள்ளத்தில் இறங்கி நின்றது. இதில் வேனின் முன்பகுதி சேதமடைந்து டிரைவர் சிவாவின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வேனிலிருந்த ஐயப்ப பக்தர்கள் 10 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம்பட்டவர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் டிரைவர் சிவா மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றவர்களுக்கு லேசான காயம் என்பதால் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும் சில
  • சுனாமி 13ம் ஆண்டு நினைவு தினம் : கடற்கரையில் கண்ணீர் அஞ்சலி



  • மூன்றரை யூனிட் மணல் ரூ.40 ஆயிரம் : கட்டிட பணி முற்றிலும் முடங்கும் அபாயம்



  • நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை நோக்கிய வகுப்புகளால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கிறது



  • ஆர்.கே.நகர் தோல்வியால் அதிமுக அழிந்து விடாது



  • ஜிஎஸ்டியால் சம்பளம் குறைப்பு எதிரொலி : திண்டுக்கல்லில் 10 ஆயிரம் நெசவாளர்கள் ஸ்டிரைக்



  • ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக்குழு இன்று கேரளா வருகை



  • புழல் சுடுகாட்டில் பரபரப்பு : வங்கி ஏடிஎம் கார்டுகள், பாஸ்புக் எரிப்பு



  • ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் டோக்கன் வழங்காத தகராறில் கூலி தொழிலாளிக்கு சரமாரி அடிஉதை



  • இன்று 13ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி



  • பழனிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர் கூட்டத்தில் பஸ் புகுந்தது 6 பேர் உடல் நசுங்கி சாவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]