இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆபாச வீடியோ வெளியிட்டதால் திருநங்கை தற்கொலை முயற்சி: ஈரோட்டில் பரபரப்பு

12/14/2017 3:56:00 PM
முல்லை பெரியாறு அணை ஆய்வுக்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு அனுமதி மறுப்பு வெற்றி கைநழுவியது எப்படி? குஜராத் காங். நிர்வாகிகளுடன் ராகுல் 3 நாள் ஆலோசனை

ஈரோடு: ஈரோடு அருகே நாடார்மேடு அண்ணமார் பெட்ரோல் பங்க் பகுதியைச் சேர்ந்தவர் சுஷ்மிதா (21). திருநங்கை. இவர் கடந்த 4 ஆண்டாக மற்றொரு திருநங்கை சங்கத்தில் இருந்து வந்தார். பின்னர் பெரியார்நகரில் உள்ள திருநங்கைகள் சங்கத்தில் சேர்ந்தார்.சுஷ்மிதா முதலாவது சங்கத்தில் இருந்தபோது ஜாலியாக பேசிய வீடியோவும், ஆபாச வீடியோவும் பேஸ்புக், வாட்ஸ்அப்பில் நேற்று முன்தினம் வெளியானது.இதை பார்த்த மற்ற திருநங்கைகள் சுஷ்மிதாவை தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டுள்ளனர். இதனால், மனமுடைந்த சுஷ்மிதா நேற்று வீட்டில் சாணிப்பவுடரை குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்தவர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சுஷ்மிதா சிகிச்சை பெற்று வருகிறார்.ஆபாச வீடியோவை வாட்ஸ்அப், பேஸ்புக்கில் வெளியிட்ட திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருநங்கைகள் மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து திருநங்கைகள் கூறியதாவது:ஈரோட்டில் 150க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இருக்கிறோம். இதில் மற்றொரு தரப்பை சேர்ந்த திருநங்கைகள் எங்கள் சங்கத்தை சேர்ந்தவர்களிடம் தொடர்ந்து தகராறு செய்கின்றனர். தற்போது, தற்கொலைக்கு முயன்ற திருநங்கை சுஷ்மிதா ஏற்கனவே அந்த சங்கத்தில் இருந்தார். ஆனால், அவர்களின் நடவடிக்கை பிடிக்காமல் அந்த சங்கத்தை விட்டு எங்கள் சங்கத்திற்கு வந்து விட்டார்.இதனால் மீண்டும் அவரை சங்கத்திற்கு இழுக்க வேண்டும் என்பதற்காக எப்போதோ ஜாலிக்காக பேசிய வீடியோவையும், ஆபாச வீடியோவையும் பேஸ்புக், வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ளனர்.

இதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டபோது மறுத்து விட்டார்கள். இந்த பிரச்னை தொடர்பாக சூரம்பட்டி போலீசில் புகார் அளித்த நிலையில் அவர்கள் புகாரை வாங்க மறுத்து விட்டனர். ஆபாச வீடியோவை பதிவிட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.


மேலும் சில
  • மாநில அளவில் தனித்திறன் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 100 பேரை வெளிநாடு அழைத்துச்செல்ல முடிவு



  • முல்லை பெரியாறு அணை ஆய்வுக்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு அனுமதி மறுப்பு



  • பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்கக்கோரி வணிகர்கள் கடையடைப்பு ஆட்டோக்கள் ஸ்டிரைக்



  • தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக எம்பில், பிஎச்டி பட்டங்கள் பணி நியமனத்துக்கு ஏற்புடையது



  • நாங்குநேரி ஆள் கடத்தல் விவகாரத்தில் திருப்பம் : ₹2 கோடி ஹவாலா பணம் மோசடி செய்தது அம்பலம்



  • திருவள்ளூரில் போலீசார் நள்ளிரவு ரெய்டு : குடிபோதை, அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 1129 வழக்குகள் பதிவு



  • ஊழியர்கள் பற்றாக்குறையால் செங்கல்பட்டு ஜி.ஹெச்சில் மாத்திரை கிடைக்காமல் நோயாளிகள் தவிப்பு



  • டிஆர்பி தேர்வு விவகாரம் : போலீஸ் விசாரணை தொடங்கியது



  • ஜெயலலிதா மர்ம மரண விவகாரம் : முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று ஆஜரானார்



  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட முயற்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]