இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

சூர்யாவை வீழ்த்திய விராட் கோஹ்லி!

12/13/2017 3:54:59 PM
சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர் எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி-பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா காதல் திருமணம், இத்தாலி நாட்டில் நேற்று முன் தினம் மிகவும் ரகசியமாக நடைபெற்றது. விராட் கோஹ்லி-அனுஷ்கா சர்மாவின் திருமண புகைப்படங்கள்தான், கடந்த 2 நாட்களாக டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. திருமணம் பற்றிய செய்தியை டிவிட்டரில் அறிவித்த விராட் கோஹ்லி, திருமண புகைப்படத்தையும் ஷேர் செய்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சூர்யா, ‘’தானா சேர்ந்த கூட்டம்’’ படத்தின் 2வது லுக் தொடர்பாக டிவிட் செய்திருந்தார். அதுவே 2017ம் ஆண்டின் கோல்டன் டிவிட் ஆக அறிவிக்கப்பட்டது. சூர்யாவின் அந்த டிவிட் தற்போது வரை 74,000க்கும் மேற்பட்ட ரீ டிவிட்களை பெற்றுள்ளது.

ஆனால் விராட் கோஹ்லியின் டிவிட் அதை ஓவர்டேக் செய்துள்ளது. பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக 78,000க்கும் மேற்பட்ட ரீ டிவிட்களை விராட் கோஹ்லியின் டிவிட் பெற்று விட்டது. கிரிக்கெட் களத்தை போல் சமூக வலைதளங்களிலும் விராட் கோஹ்லி மிகவும் புகழ்பெற்றவர். விராட் கோஹ்லி மோசமாக விளையாடுவதற்கு அனுஷ்கா சர்மாதான் காரணம் என கடந்தாண்டு ரசிகர்கள் கிண்டல் செய்தனர். வெகுண்டெழுந்த விராட் கோஹ்லி, ‘’அனுஷ்கா சர்மாவை இடைவிடாது கிண்டல் செய்பவர்களால் வெட்கப்படுகிறேன். அனுஷ்கா சர்மா எப்போதும் எனக்கு ஊக்கம் தருகிறார்’’ என டிவிட் செய்தார். அத்துடன் ‘’ஷேம் (வெட்கம்)’’ என்ற படம் ஒன்றையும் பதிவிட்டார். அதுதான் 2016ம் ஆண்டின் கோல்டன் டிவிட் ஆக உருவெடுத்தது. அல்லது அந்த ஆண்டில் அதிகம் ரீ டிவிட் செய்யப்பட்ட டிவிட் அதுவே.

மேலும் சில
  • இந்திய அணிக்கு கேப்டன் ஆன நாளை வாழ்க்கையில் மறக்க மாட்டேன்: ரோகித் சர்மா உருக்கம்



  • பாரம்பரிய ஆஷஸ் தொடரை பறிகொடுத்தது இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும் சவால் அளிக்க வேண்டும்



  • தென் ஆப்ரிக்காவில் இந்தியா வெல்லும்: சாஹா நம்பிக்கை



  • ஒரே ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தியதே உத்வேகம் அளித்தது: குல்தீப் யாதவ் உற்சாகம்



  • என்னையும், குல்தீப் யாதவையும் அஸ்வின், ஜடேஜாவுடன் ஒப்பிடுவது நியாயமற்றது: சஹால் கருத்து



  • ஒருநாள் தொடரையும் வென்றது இந்தியா இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்பதில்லை: பயிற்சியாளர் நிக் போத்தாஸ் வேதனை



  • கிரிக்கெட் உலகில் மீண்டும் சூதாட்ட புயல்: எனது மகன் தவறு செய்திருந்தால் கடுமையான தண்டனை கொடுங்கள்



  • பகல்/இரவு டெஸ்ட் தவிர்க்க முடியாதது: கங்குலி கருத்து



  • இந்தியாவுக்கு எதிராக முதல் போட்டி டெஸ்ட் அணிகளுக்கு கடும் சவால் அளிப்போம்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி சபதம்



  • காத்திருக்கும் சவால்கள் திருமணத்திற்கு பின்பும் அசத்துவாரா கோஹ்லி?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]