கல்லூரி மாணவிகள் 3 பேர் மாயம்
12/13/2017 3:48:07 PM
மயிலாடுதுறை: நாைக மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள திருவிழந்தூர் கே.கே.நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் ஆர்த்தி(19). அருகே உள்ள வழுவூரை சேர்ந்தவர் ராதிகா(20). இருவரும் தருமபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் படித்து வருகின்றனர். தோழிகளான இருவரும் நேற்றுமுன்தினம் வழக்கம் போல் வீட்டில் இருந்து கல்லூரிக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் கல்லூரிக்கு செல்லவில்லை. மாலை வீடும் திரும்பவில்லை.இதனால் உறவினர்கள், தோழிகளின் வீடுகளில் 2 பேரின் பெற்றோரும் தேடினர். எங்கும் மாணவிகள் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து 2 மாணவிகளின் பெற்றோரும், மயிலாடுதுறை காவல் நிலையத்தில நேற்று புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து 2 மாணவிகளையும் தேடி வருகின்றனர்.
அதேபோல், மயிலாடுதுறை அருகே உள்ள மேலமருதாந்தநல்லூரை சேர்ந்த செல்லையா மகள் விஜயலட்சுமி(18). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் கல்லூரிக்கு சென்ற விஜயலட்சுமி அன்று மாலை வீடு திரும்பவில்லை. எங்கு சென்றார் என்றும் ெதரியவில்லை. இதுபற்றி மணல்மேடு போலீசார் வழக்குப்பதிந்து விஜயலட்சுமியை தேடி வருகின்றனர்.