திருப்பதி மலைப்பாதையில் மண்டை ஓடு: பக்தர்கள் அதிர்ச்சி
12/13/2017 3:47:25 PM
திருமலை: திருப்பதி கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மனித மண்டை ஓடு இருந்தது. இதை பார்த்த பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் நேற்று வழக்கம்போல் பக்தர்கள் வாகனங்களில் சென்றனர். அங்கு சாலையோரத்தில் மனித மண்டை ஓடு கிடந்ததை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த திருமலை போலீசார் அந்த மண்டை ஓட்டை மீட்டு வழக்குப்பதிவு செய்து மலைப்பாதையில் திடீரென மண்டை ஓடு எப்படி வந்தது? ஏற்கனவே இங்கு தற்கொலை செய்துகொண்டவர்களின் மண்டை ஓட்டை நாய் போன்ற விலங்குகள் கொண்டு வந்து போட்டதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.