பெண்ணுக்கு பாலியல் தொல்லை கலெக்டர் ஆபீஸ் ஊழியர் கைது
12/13/2017 3:47:02 PM
காரைக்கால்: காரைக்கால் சேத்திலால் நகரை சேர்ந்தவர் ஜான்சன்(38). காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக பணியாற்றி வருகிறார். சில மாதங்களாக, காரைக்கால் கருக்களாச்சேரி மீனவ கிராமத்திலிருந்து, நகர் பகுதி தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்த 17 வயது பெண்ணை அடிக்கடி வழிமறித்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 8ம் தேதி வழக்கம் போல், அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை பெண்ணின் உறவினர்கள் சிலர் தட்டிக்கேட்டனர். அப்போது வாக்குவாதம் முற்றி, சுந்தராராஜனை பெண்ணின் உறவினர்கள் தாக்கினர். இந்நிலையில் அந்த பெண் நிரவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்சனை கைது செய்தனர்.