பைக்கில் வைத்திருந்த ₹2.85 லட்சம் திருட்டு: திருத்தணியில் கைவரிசை
12/13/2017 3:37:29 PM
திருத்தணி: திருத்தணி அடுத்த கார்த்திகேயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணன் நகரில் வசிப்பவர் புருஷோத்தமன் (54). இவர், திருத்தணி மார்க்கெட்டில் பூச்சிமருந்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு 9.30 மணியளவில் வியாபாரம் முடிந்து கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்கு கிளம்பி சென்றார். வீட்டுவாசலில் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைய முற்பட்டார். கொஞ்ச தூரம் சென்றதும் பைக்கில் வைத்திருந்த பணப்பை ஞாபகம் வந்ததால் அவற்றை எடுக்க சென்றார்.
அப்போது பின்னால் வந்த ஒரு மர்ம நபர், புருஷோத்தமன் பைக்கின் மீது இருந்த ₹2.85 லட்சம் எடுத்துக்கொண்டு அங்கு தயாராக நின்றிருந்த பைக்கில் ஏறி நண்பருடன் தப்பிச்சென்றுவிட்டார். இதுகுறித்து திருத்தணி போலீசில் புருஷோத்தமன் புகார் அளித்தார். டிஎஸ்பி பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புருஷோத்தமன் வீட்டு அருகே இருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.