இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அபார வெற்றி: தொடரை 2-0 என கைப்பற்றியது

12/12/2024 3:53:29 PM
சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர் எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்

ஹாமில்டன்: நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் கடந்த 9ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 373 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ஜீத் ராவல் 84, கிராண்ட்ஹோமி 58 ரன்கள் விளாசினர். கேப்ரியல் 4, கீமர் ரோச் 3, மிகுல் கம்மின்ஸ் 2, ரெய்பர் 1 விக்கெட் கைப்பற்றினர். வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் 66 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 4, சவுத்தி, கிராண்ட்ஹோமி, நீல் வாக்னர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 152 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, 8 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரோஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 107, கேப்டன் கேன் வில்லியம்சன் 54 ரன்கள் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில், மிகுல் கம்மின்ஸ் 3, ரோஸ்டன் சேஸ், கேப்ரியல் தலா 2, ரெய்பர் 1 விக்கெட் கைப்பற்றினர். இதன்பின் 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக மிக கடினமான இலக்குடன் கடைசி இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ், நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி கொண்டிருந்தது. கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் 13, ஷாய் ஹோப் 1 ரன்களுடன் இன்று 4ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஆனால் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 240 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 64 ரன்கள் எடுத்தார். கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் 20, ஷாய் ஹோப் 23 என மற்ற முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து தரப்பில், நீல் வாக்னர் 3, சவுத்தி, டிரென்ட் போல்ட், சாண்ட்னர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியிலும், இன்னிங்ஸ் மற்றும் 67 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது. இதன்பின் தலா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. முதலில் ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி, டிசம்பர் 20ம் தேதி நடைபெறுகிறது.

மேலும் சில
  • இந்திய அணிக்கு கேப்டன் ஆன நாளை வாழ்க்கையில் மறக்க மாட்டேன்: ரோகித் சர்மா உருக்கம்



  • பாரம்பரிய ஆஷஸ் தொடரை பறிகொடுத்தது இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும் சவால் அளிக்க வேண்டும்



  • தென் ஆப்ரிக்காவில் இந்தியா வெல்லும்: சாஹா நம்பிக்கை



  • ஒரே ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தியதே உத்வேகம் அளித்தது: குல்தீப் யாதவ் உற்சாகம்



  • என்னையும், குல்தீப் யாதவையும் அஸ்வின், ஜடேஜாவுடன் ஒப்பிடுவது நியாயமற்றது: சஹால் கருத்து



  • ஒருநாள் தொடரையும் வென்றது இந்தியா இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்பதில்லை: பயிற்சியாளர் நிக் போத்தாஸ் வேதனை



  • கிரிக்கெட் உலகில் மீண்டும் சூதாட்ட புயல்: எனது மகன் தவறு செய்திருந்தால் கடுமையான தண்டனை கொடுங்கள்



  • பகல்/இரவு டெஸ்ட் தவிர்க்க முடியாதது: கங்குலி கருத்து



  • இந்தியாவுக்கு எதிராக முதல் போட்டி டெஸ்ட் அணிகளுக்கு கடும் சவால் அளிப்போம்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி சபதம்



  • காத்திருக்கும் சவால்கள் திருமணத்திற்கு பின்பும் அசத்துவாரா கோஹ்லி?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]