இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டம் வாபஸ்

12/12/2024 3:16:53 PM
சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர் எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்

சென்னை: அரசு உதவி மருத்துவர் நியமனத்தில் தங்களுக்கான முன்னுரிமை பறிக்கப்பட்டுள்ளதாக, முதுநிலை மருத்துவ மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் நவம்பர் 20ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். நவம்பர் 23ம் தேதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்திக்க முயன்றனர். ஆனால் அனுமதி மறுக்கப்படவே அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவகல்லூரிகளில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் மனிதசங்கிலி போராட்டம், முகத்தில் கரியை பூசி போராட்டம், கருப்பு பலூன் பறக்க விடும் போராட்டம், உள்ளிருப்பு போராட்டம் என பல்வேறு வகை போராட்டம் நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில் கடந்த 6ம் தேதி சென்னையில் ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை அருகில் மனிதசங்கிலி போராட்டம் நடத்திய டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து மருத்துவ கல்வி இயக்கக வளாகத்தில் நேற்று ஆணி பலகை மீது நடக்கும் போராட்டம் நடத்தினர். அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர் பிரதிநிதிகள் 40 பேர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை இரவு வரை நீடித்தது. அதைத்தொடர்ந்து இன்று முதல் பணிக்கு திரும்புவதாக முதுநிலை மருத்துவ மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக முதுநிலை மருத்துவ மாணவர்கள் கூறியதாவது:கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தினோம். சுகாதாரத்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தையின்போது, எங்களின் எல்லா கோரிக்கைகளையும் அவர் கேட்டறிந்தார். அதில் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். நீதிமன்றத்தில் அதுதொடர்பான வழக்கு நடந்து வருவதால் இந்த விவகாரத்தில் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் தர முடியாது என்று அவர் கூறினார். எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்.

அதற்காக நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை திரும்ப பெற போவதில்லை, வழக்கு தொடர்ந்து நடைபெறும். வழக்கின் தீர்ப்பு, அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பார்த்துவிட்டு தேவைப்பட்டால் மீண்டும் போராட்டத்தை தொடர்வோம்.

மேலும் சில
  • சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர்



  • ஆர்.கே.நகர் தொகுதியில் மது விற்பனைதான் வளர்ச்சி அடைந்துள்ளது: தமிழிசை பேட்டி



  • தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை விநியோகம் 25ம் தேதி வரை தற்காலிக நிறுத்தம்



  • எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்



  • கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: ஆர்.கே.நகர் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தலை ரத்து செய்தால் பல கோடி ரூபாய் செலவு செய்தது வீண் தேர்தல் ஆணைய அதிகாரி ஆதங்கம்



  • கவர்னர் ஆய்வு மேற்கொண்டு அரசு நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது சரத்குமார் அறிக்கை



  • குமரியில் இன்று ஓகி புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர், கவர்னர், முதல்வர் நேரில் ஆய்வு: 3500 போலீஸ் குவிப்பு



  • 96வது பிறந்தநாளை முன்னிட்டு அன்பழகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து



  • ஓகி புயல் நிவாரணமாக ரூ.2,000 கோடி ஒதுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் ட்விட்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]