இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

குஜராத்தில் பாஜவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: தலித் தலைவர் மேவானி பேச்சு

12/12/2024 2:57:22 PM
முல்லை பெரியாறு அணை ஆய்வுக்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு அனுமதி மறுப்பு வெற்றி கைநழுவியது எப்படி? குஜராத் காங். நிர்வாகிகளுடன் ராகுல் 3 நாள் ஆலோசனை

அகமதாபாத்: குஜராத் தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தால் பாஜ மதவாதத்தை தூண்டிவிடுவதாக அந்த மாநில தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி குற்றம் சாட்டியுள்ளார். குஜராத் சட்டமன்றத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல் கட்ட தேர்தல் கடந்த 9ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது. 2ம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடக்க இருக்கிறது. இன்றுடன் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. வட்காம் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் தலித் தலைவர் மேவானி போட்டியிடுகிறார். நேற்று நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மத்தியில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. இது தொடர்பாக அவர்கள் இதுவரை உரிய விளக்கம் அளிக்கவில்லை. தீவிரவாதத்துக்கு துணை போகும் அமைப்புடன் எனக்கு தொடர்பு இருப்பதாக அமித்ஷா குற்றம் சாட்டி வருகிறார். என்மீது சுமத்த வேறு எந்த குற்றச்சாட்டும் கிடைக்காத காரணத்தால் மதவாத குற்றச்சாட்டை பாஜ சுமத்துகிறது. உண்மையில் குஜராத்தில் பாஜ வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றால் அதனை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய வேண்டியது தானே?

மதவாத பிரச்னையை கையில் எடுப்பது ஏன்? குஜராத் தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் கடைசி ஆயுதமாக தங்களை எதிர்த்து போட்டியிடுபவர்களுக்கு எதிராக மதவாத பிரசாரத்தை பாஜ மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு மேவானி கூறினார்.

மேலும் சில
  • குஜராத் பாஜ. காங்கிரசில் 47 எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்கு



  • வெற்றி கைநழுவியது எப்படி? குஜராத் காங். நிர்வாகிகளுடன் ராகுல் 3 நாள் ஆலோசனை



  • நடிகை கடத்தல் வழக்கில் திருப்பம் : நடிகர், நடிகைகள் வாக்குமூலம் கசிந்ததால் பரபரப்பு



  • நம்பகத்தன்மையை இழந்தது காங்கிரஸ் தான் : ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி



  • குஜராத் தேர்தலில் 16 தலைவர்கள் தோல்வி



  • குஜராத்தில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் சரிவு மாநிலங்களவை தேர்தலில் 2 எம்பிக்களை பாஜ இழக்கும்



  • குஜராத்தை கலக்கிய நோட்டா: தேசிய கட்சிகளை பின்னுக்கு தள்ளியது



  • மோடி ஹீரோ நான் ஜீரோ தவறான கணிப்பு வெளியிட்ட பாஜ எம்பி மன்னிப்பு



  • குஜராத், இமாச்சலை தொடர்ந்து கர்நாடகாவிலும் பாஜ வெற்றி பெறும்: முன்னாள் முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை



  • குஜராத்தில் பாஜவுக்கு தோல்விபயத்தை காட்டிய ராகுலின் நம்பிக்கை அவரை முன்னெடுத்து செல்லும்: சிவசேனா பாராட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]