சிறுநீரக கோளாறு: கங்கை அமரனுக்கு கோவையில் சிகிச்சை
12/5/2025 3:45:02 PM
ேகாவை: திரைப்பட இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான கங்கை அமரனுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையில் கடந்த மாதம் 30ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரை திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் மருத்துவமனையில் சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தனர். இன்னும் ஓரிரு நாளில் கங்கை அமரன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் கூறினர். கங்கை அமரன் கடந்த முறை சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.